»   »  எனக்கு 'அந்த' திறமை எல்லாம் இல்லை: ஒப்புக் கொண்ட நடிகை சாதனா

எனக்கு 'அந்த' திறமை எல்லாம் இல்லை: ஒப்புக் கொண்ட நடிகை சாதனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் இருக்க தனித்திறமை வேண்டும். அது எனக்கு இல்லை என நடிகை சாதனா தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் ஹீரோயின் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் சாதனா. தற்போது அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிப்பு மற்றும் அரசியல் பற்றி கூறுகையில்,

டிவி தொடர்கள்

டிவி தொடர்கள்

நான் தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தமிழ் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன்.

இந்தி தொடர்கள்

இந்தி தொடர்கள்

டப் செய்யப்படும் தொலைக்காட்சி தொடர்களால் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் பிற மொழி தொலைக்காட்சி தொடர்களை தமிழில் டப் செய்யக் கூடாது.

தவறுகள்

தவறுகள்

தொலைக்காட்சி தொடர்களை பார்த்து தான் பலரும் தவறு செய்கிறார்கள். தவறுகள் அதிகரிக்க தொலைக்காட்சி தொடர்கள் காரணம் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை.

அரசியல்

அரசியல்

அரசியல் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அதற்கு தனித்திறமை வேண்டும். எனக்கு அந்த திறமை இல்லை என நடிகை சாதனா தெரிவித்துள்ளார்.

English summary
Actress Sadhana who is busy with Telivison serials said that she doesn't have the talent to be in politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil