இதுக்கு எனக்கு தகுதி இருக்கான்னு தெரியலையே: ஃபீல் பண்ணிய ஓவியா

By Siva

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா பிக் பாஸ் பற்றி பேசி ஃபீல் பண்ணியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர் ஓவியா. இந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் யாருக்கும் ஓவியா போன்று ஆதரவு கிடைக்கவில்லை.

ஓவியாவுக்கு கிடைத்த ஆதரவை பார்த்து தான் பலருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசையே வந்தது.

ஓவியா

ஓவியா

மன அழுத்தம் ஏற்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்ற ஓவியாவுக்கு இன்றளவும் ரசிகர்கள் அதிகம். முதல் சீசன் போட்டியாளர்கள் பிக் பாஸ் 2 வீட்டிற்கு விருந்தினர்களாக வந்துள்ள நிலையில் ஓவியா வந்தால் நன்றாக இருக்கும் என்று பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். ஆரவ் வந்ததை பார்த்த பார்வையாளர்கள் ஓவியாவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியை விளம்பரம் செய்ய அவர்களுக்கு ஓவியா தேவைப்பட்டார். முதல் நாள் வந்த வேகத்தில் கிளம்பிவிட்டார் ஓவியா. தற்போது அவர் மீண்டும் வந்து சில நாட்கள் தங்கியிருந்தால் நன்றாக இருக்கும் என்று பார்வையாளர்கள் விரும்புகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும், ஓவியாவும் ஒன்றாக வெளிநாட்டிற்கு செல்லும் அளவுக்கு நெருங்கிவிட்டார்கள். அதனால் ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இந்த நேரம் ஓவியா வந்தால் காதல் கைகூடிவிடும் என்பது எதிர்பார்ப்பு.

ஆதரவு

ஆதரவு

இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா, தனக்கு பிக் பாஸ் மூலம் பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்துள்ள இந்த அன்புக்கும், ஆதரவுக்கும் தான் தகுதி உடையவரா என்று தெரியவில்லை என்றார் ஓவியா. ரசிகர்களின் அமோக ஆதரவை பெற தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக பெருமைப்பட்டார் ஓவியா.

மாற்றம்

மாற்றம்

பிக் பாஸுக்கு முன்பும், பின்பும் வாழ்க்கையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வெளியே சென்றால் யாருக்கும் என்னை தெரியாது. ஆனால் தற்போது என்னை அடையாளம் கண்டு என்னிடம் வந்து பேசுகிறார்கள். மக்களின் இந்த அன்புக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓவியா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X