கிளாமர் எனக்கு சரிப்பட்டு வராது – 'மீனாட்சி' ஸ்ரீஜா

By Mayura Akilan

Sreeeja
இந்த மாதிரி ஒரு மருமகள் கிடைச்சா நல்லா இருக்கும் என்று இன்றைய மாமியார்கள் கேட்கும் அளவிற்கு அனைவரின் நெஞ்சங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அழகு ஸ்ரீஜா. மதுரையில் தொடங்கி இன்றைய முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சி வரை ஹோம்லியான கேரக்டர்களின் அழகாய் ஸ்கோர் செய்து வருகிறார் ஸ்ரீஜா. சரவணன் மீனாட்சியில் பிஸியாக இருந்த அவரிடம் பிஸியான சீரியல் வாழ்க்கைப் பற்றி கேட்டோம்.

நான் இங்கு டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவுக்கு வந்துட்டேன். நடிக்கணும், நடனம் ஆடணுங்கிற ஆர்வத்தில ஸ்கூல்ல மூன்றாவது படிக்கும் போதே கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன். ஐந்தாவது படிச்சிட்டிருந்தப்ப, மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந் தப்ப மீண்டும் பட வாய்ப்புகள் கிடைச்சது. கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோதரன் சகோதரி, வால் கண்ணாடி படங்களில் நடிச்சேன்.

சுவாமி ஐயப்பன் படத்தில நடிச்சிட்டிருந்தப்ப மதுரை சீரியலுக்கு டைரக்டர் ஜெரால்டு ஹீரோயின் தேடிட்டிருந்திருக்கிறார். அப்ப என்னோட போட்டோவை சுவாமி ஐயப்பன் படத்தயாரிப்பார் கார்த்திகேயன் டைரக்டர் ஜெரால்டிடம் காட்டியிருக்கிறார். பார்த்த டைரக்டர் இதே மாதிரி பெண்தான் நான் நினைச்சிருக்கிற கேரக்டருக்கு பொறுத்தமாயிருப்பாள்ன்னு சொல்லியிருக்கார். மதுரை சீரியலில், நடிக்க அழைப்பு வந்தது.

சினிமாவை விட சீரியலில் நடிப்பது பிடிச்சிருந்தது. நடிச்சிட்டிருக்கேன். மலையாளத்திலும், தமிழிலும், சினிமா வாய்ப்புகள் வந்தன. அவுங்க கேட்ட தேதிகளில், சீரியல் ஷூட்டிங் இருந்ததால, ஏத்துக்க முடியாம போச்சு. மற்றபடி சினிமாவில் நடிப்பதில், எனக்கு ஏதும் பிரச்னையில்லை.

மதுரைதான் என்னோட முதல் சீரியல். அதிலேயே எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்போது முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சின்னு எனக்கேத்த கதை அமைஞ்சிருக்கு.

ஷூட்டிங் ஸ்பாட்ல, ஷாப்பிங் செல்கிற இடங்கள்ல, என்னை அடையாளம் கண்டுக்கிட்டு நலம் விசாரிக்கிறாங்க. யூத்கேர்ள்ஸ் சிநேகமா பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு. என்னதான் கதாநாயகியாக அனைவருக்கும் பிடித்தமாதிரி நடித்தாலும் வில்லியாக நடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் என் முகமும், தோற்றமும் பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக இருப்பதால் வில்லி கேரக்டர்கள் எனக்குக் கொடுக்க மறுக்கிறார்கள் சின்னதிரை இயக்குநர்கள் என்று வருத்தப்பட்டு சொன்னார் ஸ்ரீஜா.

அதேபோல் நிறைய பேர் கிளாமராக நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கும் கிளாமருக்கும் செட் ஆகாது. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதேன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். என்னை பார்க்கிறவங்க சிநேகமா மரியாதையா பேசற அளவுக்கு பேசப்படும்ன்னு நான் நினைக்கிற படி கேரக்டர் அமைந்தால் மட்டுமே, நடிப்பேன்.

என்னோட உடல் வாகிற்கு கிளாமர் கேரக்டரெல்லாம் ஒத்து வராது. பணம் கிடைக்கிறது, புகழ் கிடைக்கிறதுன்னு நினைச்சு இஷ்டத்திற்கு நடிக்க என்னால் முடியாது. நல்ல கேரக்டராக இருந்தால் நடிப்பேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னார் ஸ்ரீ ஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X