twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லக்கா கிக்கா மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன்… ரோஜா

    By Mayura Akilan
    |

    Lukka Kikka
    நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்களே ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ நடத்த தயங்கும் நேரத்தில் ஜீ தமிழ் சேனலில் 'லக்கா கிக்கா' நிகழ்ச்சியில் அதிரடி ஆட்டம் போட்டு தெலுங்கு கலந்த தமிழில் பேசி அசத்துகிறார் நடிகை ரோஜா.

    இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு புதுப்புது தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டாராம். செம்பருத்தியில் அறிமுகமான ரோஜா நூறு படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து இப்போது கதாநாயகிகளின் அம்மாவாக நடித்து வருகிறார்.

    சின்னத்திரையில் சீரியலில் நடித்து அழுது வடிந்த ரோஜா இப்போது அதிரடி கேம் ஷோக்களை திறம்பட நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

    நதி எங்கே போகிறது?

    சினிமாவில் பிரபலமாக இருந்த ரோஜா சின்னத்திரைக்கு வந்தது நதி எங்கே போகிறது என்ற தொடரின் மூலம்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

    அழுகை பிடிக்காதாம்

    இந்த தொடருக்குப் பின் வேறு தொடர்களில் ரோஜா நடிக்கவில்லை. காரணம் சோகம், அழுகை பிடிக்காது என்பதுதானாம். அதனால்தான் டிராக் மாறி ரியாலிட்டிஷோ, கேம்ஷோக்களில் புகுந்துவிட்டார். தொலைக்காட்சித் தொடர்களில் அழகைக் காட்டிலும் அழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது ரோஜாவின் கருத்து.

    பிரபலப்படுத்திய நிகழ்ச்சி

    நூற்று ஐம்பது படங்கள்வரை நடித்து நல்ல பெயருடனும் புகழுடனும் இருக்கும் நீங்கள் தொலைக்காட்சியில் ஏதேனும் டாக் ஷோ அல்லது கேம் ஷோ நடத்தினால் நல்ல வரவேற்பு இருக்குமே? என்று ரோஜாவைப் பார்த்து கேட்கவே "மா' தெலுங்கு சேனலில் முழுக்க முழுக்க பெண்களுக்காகவே தொடங்கப்பட்ட "மாடர்ன் மகாலட்சுமி' என்ற புதுமையான கேம் ஷோ வை தொகுத்து வழங்கினார். 500 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி பெறும் வெற்றி பெற்றது இந்த ஷோ.

    ஜீ தொலைக்காட்சியில் 'லக்கா கிக்கா'

    "மாடர்ன் மகாலட்சுமி' இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்துதான் ஜீ தொலைக் காட்சியின் "லக்கா கிக்கா' கேம் ஷோ நிகழ்ச்சிக்கு அழைத்தார்களாம். இந்த நிகழ்ச்சி சந்தோசத்தையும் மன நிறைவையும் தருகிறதாம்.

    புது புது தமிழ் வார்த்தைகள்

    தாய் மொழி தெலுங்கு என்பதால் இந்த ஷோவில் ரோஜா பேசும் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் இந்தக் குழுவில் உள்ளவர்கள் "தெலுங்கு வாடை வீசும் மழலைத் தமிழ் ரசிக்கும்படிதான் இருக்கும்' என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்களாம். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு புதுப்புது தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்கிறாராம். ஹைதராபாத்தில் வசிக்கும் ரோஜா மாதம் நான்கு நாள்கள் படப்பிடிப்புக்கு சென்னை வந்து செல்கிறராம்.

    English summary
    Actress Roja has said that she has learnt Tamil through Zee TV's Lukka Kikka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X