எனக்கு நிறைய வாத்தியாருங்க இருக்காங்க… கமல்

By Mayura Akilan

தொலைக்காட்சிகளில் பார்க்கும் சில நிகழ்ச்சிகள் சுவையானதாக இருக்கும். சில நிகழ்ச்சிகள் தலைவலியை ஏற்படுத்தி ரிமோட் தேடத் தோன்றும்.

விஜய் டிவியில் நேற்று ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது நிறைய விசயங்களை, தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சியாக இருந்தது.

பிரகாஷ்ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இதுநாள்வரை பொதுமக்கள்தான் பங்கேற்பாளர்களாக இருந்தனர். நேற்றைய பங்கேற்பாளர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

Neengalum Vellalam oru kodi

ஒட்டகக்கதையை சொல்லி ஆரம்பித்தார் பிரகாஷ்ராஜ். நிகழ்ச்சிக்கு வந்த கமலிடம் வழக்கம் போல ஹாட் சீட் பற்றி கேட்டார் அதற்கு பதில் கூறிய கமல், ஒவ்வொரு சீட்டில் உட்காரும் போது இது நமக்கு தகுதியானதுதானா என்று கேட்டுக்கொள்வேன் என்றார்.

பிரகாஷ் ராஜ் கேட்ட கேள்விகள் என்னவோ சாதாரணமானதுதான்.

அம்புலிமாமா கதையில் வரும் அம்புலி யார்?

சென்னை பாஷையில் பேமானி என்ற சொல் எதைக்குறிக்கும்?

இப்படி ஒவ்வொரு கேள்விகளும் சாதாரணமானதுதான். ஆனால் அந்த கேள்விகளுக்கு பதிலை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல் அதற்கு கமல் சொன்ன விளக்கங்கள் ஆச்சரியப்படத்தக்கவை.

தன்னுடைய வாழ்நாளில் பள்ளி ஆசிரியர் தவிர வேறு யாரெல்லாம் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசான்கள் என்று நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்.

தமிழ் கற்றுக் கொடுத்த கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன், நடிப்பு கற்றுக் கொடுத்த எம்.ஜி.ஆர், சிவாஜி,

தன்னுடைய படங்களில் சிறப்பு பகுதி பாஷைகளைப் பேசி நடிக்கும் போது கூடவே இருந்த லூஸ்மோகன், கோவை சரளா, மகள் ஸ்ருதி என அனைவருமே தனக்கு ஆசான்கள்தான் என்று அடக்கத்தோடு பதிவு செய்தார் கமல்.

நிகழ்ச்சியில் பேசும் போது, வேலை இல்லாத சமயத்தில் தான் முகச்சவரம் செய்ய கற்றுக் கொண்டதாக கூறிய கமல், தன்னுடைய தேவர் மகன், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் வைத்திருந்த மீசை ஸ்டைல் தன் கையால் தானே வடிவமைத்தது என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

இதுநாள் வரை பங்கேற்பாளர்களுக்கு கதைகள் சொல்லி விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் கூறிய விளக்கங்கள், அனுபவங்களை ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யமானதாகத்தான் இருந்தது.

இதுவரை 5000 ரூபாய்களை ஜெயித்திருக்கிறார். இன்றும் நிகழ்ச்சி தொடர்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் கமல் உடன் கவுதமியும் பங்கேற்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X