நிறைய காதல் கல்யாணம் செய்து வைத்திருக்கிறேன்: நிர்மலா பெரியசாமி
மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்வு சொல்வது மனதிற்கு நிறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார் 'வாய்மையே வெல்லும்' நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி.
பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக களம் இறங்கியவர் நிர்மலா பெரியசாமி. இவரது வணக்கம் என்ற வார்த்தை வித்தியாசமாக இருக்கவே வணக்க்க்கம் நிர்மலா பெரியசாமி என்றே புகழ் பெற்றவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் டி.வியில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சி நல்ல வரவேற்பு கிடைத்ததும் அதன் தயாரிப்பாளராக மாறினார்.

வாய்மையே வெல்லும்
ஜீ தமிழில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி இப்போது வசந்த் டி.வியில் வாய்மையே வெல்லும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

மனங்களைப் படிப்பேன்
சின்ன வயதிலிருந்தே மற்றவர்களின் மனங்களை படிக்கும் பழக்கம் இருந்தது. அதுதான் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பலத்தை கொடுத்தது. எல்லோரையும் பேச விட்டுக்கேட்டு அதில் உண்மைநிலையை அறிந்து எனது கருத்தை சொல்வேன்.

ஆண்களின் மதுப்பழக்கம்
சொல்வதில் உண்மை எது பொய் எது என்பதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். இந்த நிகழ்ச்சியில் ஆணின் மது பழக்கத்தால் வரும் பிரச்னைகள்தான் அதிகம்.

பழிவாங்கும் போக்கு
ஆண்கள் மட்டும்தான் தப்பு செய்ய வேண்டுமா என்று ஆணை பழிவாங்க பெண்ணும் அதே தப்பை செய்யும் போக்கு அதிகமாகி இருக்கிறது. இந்த போக்கு மாறவேண்டும்.

காதல் திருமணங்கள்
நிறைய குடும்பங்களை சேர்த்து வைத்திருக்கிறேன். நிறைய காதலை கல்யாணத்தில் முடித்திருக்கிறேன். தினமும் 300 பேர் போனில் பேசுகிறார்கள். நான்கைந்து பேராவது நேரில் வந்து விடுகிறார்கள். முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவுகிறேன், மனதுக்கு நிறைவாக இருக்கிறது என்கிறார் நிர்மலா பெரியசாமி.


Click it and Unblock the Notifications