எனக்கு ரொமான்ஸ் ரொம்ப பிடிக்கும்… 'ஆபிஸ்' கார்த்திக்
எப்ப பார்த்தாலும் பொண்ணுங்க பேட்டிதான் போடுவீங்களா? எங்க பேட்டி எல்லாம் போடமாட்டீங்களா என்று ஏங்க ஆரம்பித்துவிட்டனர் இளம் தொகுப்பாளர்கள், டிவி ஹீரோக்கள்.
அதனால் சீரியல் ஹீரோக்களின் பேட்டிகளையும் போடலாம் என்று முடிவு செய்து முதலாவதாக ரொமான்ஸ் ஹீரோ கார்த்திக்கை பிடித்தோம். ஆபிஸ் சீரியலில் சிரித்துக் கொண்டே பேசி இளம் நெஞ்சங்களின் டியர் ஆகிவிட்ட கார்த்திக், பேட்டி என்ற உடன் ஜாலியாக ஒத்துக் கொண்டார்
எப்படி தொடங்கியது சீரியல் வாழ்க்கை என்று நம்மிடையே பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.

கனா காணும் காலங்கள்
விஜய் டிவியில் 'கனா காணும் காலங்கள்' சீரியல்ல 22 பசங்கள்ல ஒருத்தனா முகம் காட்டினேன். இவ்ளோ சீக்கிரமாவே இன்னிக்கு தனியாக ஹீரோவாக நடிக்கிறேன். நிறைய பாராட்டுகள் கிடைக்கிறது. என்னைத் தேர்ந்தெடுத்த விஜய் டி.வி. ரமணன் சாருக்குதான் நன்றி சொல்லணும்.

சினிமா குடும்பம்தான்
''அப்பா சினிமாவில் 35 வருஷத்துக்கும் மேல புரொடக்ஷன் துறையில் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அதுதான் சின்ன வயசுல இருந்தே மீடியா மேல எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திச்சு.

அனிமேசன் கோர்ஸ்
ஸ்கூல் முடிச்ச கையோட அனிமேஷன் கோர்ஸ் சேர்ந்தேன். 2 வருஷம்தான் படிச்சேன். கடைசி செமஸ்டர் இன்னும் முடிக்கவே இல்லை. மோகன் ராதா சார்கிட்ட புரொடக்ஷன் துறையில அசிஸ்டன்ட்டா வேலைக்குச் சேர்ந்து, மீடியா பாடம் படிச்சேன்.

எதிர்பாராத சீரியல் வாய்ப்பு
விஜய் டி.வி-யில புரொடக்ஷன் துறையில சேர்ந்த எனக்கு... எதிர்பாராத சான்ஸ்தான் சீரியல் ஆக்டர். ஜாலியாக ஆபிஸ் போய் கலாட்டா செய்யும் வேலைதான். கூடவே ரொமான்ஸ், ப்ரண்ட்ஸ் என செம கலக்கல் என்கிறார்.

சினிமாவில் ரொமான்ஸ்
சீரியலில் கிடைத்த நல்ல பெயர் மூலம் இப்போ சினிமா வாய்ப்பும் வரத் தொடங்கியுள்ளதாம். விரைவில் சிவகார்த்திகேயன், சிவா, மிர்ச்சி செந்தில் வரிசையில் வெள்ளித்திரையில் ஹீரோவாக ரொமான்ஸ் செய்ய இருக்கிறார் கார்த்திக்.

நிஜத்திலும் ரொமான்ஸ்
சீரியலில் அழகாய் ரொமான்ஸ் செய்யும் கார்த்திக், நிஜ வாழ்க்கையிலும் ரொமான்ஸ் நாயகன்தானாம். அழகாக போகிறதாம் நிஜ ரொமான்ஸ், வெகு விரைவில் வெளி உலகத்திற்கு அறிவிப்போம் என்று கூறிவிட்டு வெட்கப்பட்டு சிரித்தார் கார்த்திக்.


Click it and Unblock the Notifications











