புடவைதான் ரொம்பப் பிடிக்கும்: வள்ளி நாயகி வித்யா
சன்டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் வள்ளி சீரியலின் நாயகி வித்யா, இல்லத்தரசிகளின் செல்லமாகிவிட்டார். காரணம் அழுகாச்சி நாயகிகள் மத்தியில் மாமியாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்.
இதனால் பெண்கள் மத்தியில் பெஸ்ட் ஹீரோயின் என்று பெயரெடுத்துள்ளார் வித்யா. மலையாள தேசத்தில் இருந்து வந்துள்ள மற்றொரு புதுவரவு இவர்.
நடிகர் வினுமோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள வித்யா. அவரின் சம்மதத்தோடு தமிழ் சீரியல் உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

பாதியில் வந்தாலும்..
சன்டிவியில் வள்ளி சீரியல் தொடங்கப்பட்ட போது முதலில் நடித்தவர், உமா. அவர் பாதியில் விலக நேரிட்டதால் அவருக்கு பதிலாக கமிட் ஆனவர் வித்யா. தமிழ் சீரியலில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே அவரை தமிழ்நாட்டுப் பக்கம் வரவழைத்துள்ளதாம்.

காதல் கணவரின் ஆசை
மலையாள நடிகர் வினுமோகன்தான் வித்யாவின் கணவர். பல படங்களில் நடித்துள்ளார். வினு உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது காதலாகி அது திருமணத்தில் முடிந்துள்ளது.

வள்ளி முடியப்போகுதாமே?
வள்ளி சீரியல் பல இல்லத்தரசிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டது. எனவே நல்ல ரேட்டிங்கில் உள்ளது. எனவே அதை சீக்கிரம் முடிக்கமாட்டார்கள் என்று உறுதியோடு கூறுகிறார் வித்யா.

கொண்டாடும் கணவர்
டிவியில் வித்யா நடித்த சீரியலை இருவருமே சேர்ந்துதான் பார்ப்பார்களாம். வித்யாவின் நடிப்பு கணவருக்கு ரொம்ப பிடிக்கும். தூக்கி கொண்டாடுவார் என்கிறார் வித்யா.


Click it and Unblock the Notifications











