ரசிகர்களிடம் திட்டுவாங்குவது எனக்கு சந்தோஷம்: 'தென்றல்' வில்லி வீணா நாயர்
சன் டிவியில் தென்றல் தொடரில் கடந்த 100 எபிசோடுகளாக வில்லத்தனம் செய்து வரும் மாயா பற்றிதான் இப்போது இல்லத்தரசிகளிடம் பேச்சு அடிபடுகிறது.
திட்டி தீர்க்கிறார்கள் மாயாவை. துளசி வாழ்க்கையை இப்படியா கெடுப்பது. ஏன் இப்படி என்று குமுறுகிறார்கள். ஆனால் மாயாவோ இந்த திட்டுதான் தனக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.
மாயாவின் ஒரிஜினல் பெயர் வீணா நாயர். மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சீரியலுக்கு வந்த மற்றொரு புதுவரவு. தென்றல் சீரியலின் ஹீரோயினியும் மலையாளமங்கைதான், வில்லியும் மலையாளதேசத்து மங்கைதான்.

திருமதி செல்வமாக மலையாளத்தில்
தமிழில் ஒளிபரப்பான திருமதி செல்வத்தின் மலையாள ரீமேக்கான நில விளக்கில் நந்தினி கேரக்டரில் நடித்தவர் வீணா நாயர். அதன் மூலம் இப்போது தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார்.

இளம் வயதிலேயே வில்லி
சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரின் மிரட்டும் வில்லியாக மாயா கேரக்டரில் நடிக்கிறார். நிஜத்தில் இவருக்கு வயது 25தான் ஆனால் 35 வயது மாயாவாக திருமண வயதில் உள்ள பெண்ணிற்கு நடிக்கிறார்.

பவர்புல் வில்லி
மாயா கேரக்டரை பிடிச்சுதான் பண்றேன். அந்த கேரக்டரின் பவர்புல்லான வில்லத்தனம்தான் என்னை நடிக்க வைத்தது. தமிழ், துளசியை கொடுமைப்படுத்தும் போது அதிகம் திட்டு வாங்குகிறேன் என்கிறார் வீணா.

திட்டுவாங்குவது சந்தோசம்
தென்றல் பார்க்கும் எல்லா வீட்டிலும் தினமும் என்னை திட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்னை திட்ட திட்ட நான் வெற்றி பெறுகிறேன் என்று பொருள். நான் நன்றாக நடிக்கிறேன் என்று கூறிகிறார் பெருமை பொங்க

மலையாளதிரைப்படங்களில்
மலையாள தொடர்கள், தமிழ் தொடர்கள் இரண்டையும் இரு கண்ணாக நினைக்கிறேன். சீரியல் தவிர மலையாள படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்கிறேன்.

நடனம் என் உயிர்
இதுதவிர நான் பரத நாட்டியத்தில் பட்டப்படிப்பு முடித்திருப்பதால் கோட்டயத்தில் நடன பள்ளி நடத்துகிறேன். நடிப்பு இல்லாத நேரத்தில் எனது நடன பள்ளிதான் என் கோவில் , நடனம்தான் என் உயிர் என்கிறார் வீணா.


Click it and Unblock the Notifications











