பிக் பாஸ் வீட்டில் தினம் தினம் அழும் சென்றாயன்: காரணம் யார் தெரியுமா?

By Siva

சென்னை: தான் தினம் தினம் அழுவதாக கமல் ஹாஸனிடம் தெரிவித்துள்ளார் சென்றாயன்.

அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா சென்றாயன் ஏமாற்றி காரியம் சாதித்தார். சென்றாயனிடம் பொய் சொல்லி அவர் தலைமுடிக்கு சிவப்பு கலர் அடித்துவிட்டார் ஐஸ்வர்யா.

ஏமாந்து போனாலும் ஐஸ்வர்யா மீது கோபம் காட்டவில்லை சென்றாயன்.

முடி

முடி

ஹேர் கலர் செய்த பிறகு சென்றாயனின் முடி வித்தியாசமாக பரட்டையாக உள்ளது. கலர் செய்த பிறகு முடி கொட்டுகிறதாம். இதனால் தினம் தினம் அழுவதாக சென்றாயன் கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். ஆனால் கமல் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏமாற்றிய ஐஸ்வர்யாவோ என்னை மாதிரி நல்லவர் உண்டோ என்பது போன்று பாவமாக உட்கார்ந்திருந்தார்.

ரித்விகா

ரித்விகா

ரித்விகா தன் கையில் உள்ள டாட்டூவை கமலிடம் காண்பித்தார். இது தான் முதல் முறையா நீங்க டாட்டூ போடுவது என்று கமல் கேட்டார். இல்லை இது இரண்டாவது முறை என்று பதில் அளித்தார் ரித்விகா. முதல் முறையும் இப்படித் தான் அழுதீர்களா என்று கேட்டு கமல் சிரித்தார். ரித்விகா டாட்டூ குத்தியது பலவகையான விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது. முக்கியமாக பலரும் அவரை தான் கிண்டல் செய்கிறார்கள்.

ஜனனி

ஜனனி

புருவத்தை ப்ளீச் செய்த பிறகு முகமே மாறிவிட்டதாக ஃபீல் பண்ணினேன் என்று ஜனனி கமலிடம் தெரிவித்தார். தாடி பாலாஜியும் தனக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்றார். பதிலுக்கு கமல், இப்போ ஏசி நல்லா சில்லுன்னு குளிருமே என்று கூறி சிரித்தார். இருப்பதிலேயே தனது டாஸ்க் தான் கஷ்டம் என்று கமலிடம் கூறினார் ஐஸ்வர்யா. மும்தாஜை விட்டு முடி வெட்ட வைத்திருக்கணும், ப்ரொபஷனல் வந்ததற்கே இந்த கூப்பாடா?

யாஷிகா

யாஷிகா

சேலை உடுத்தி மேக்கப் போடாமல் இருக்கும் யாஷிகாவை பார்த்தால் இந்த பொண்ணு தான் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்ததா என்ற கேள்வி எழுகிறது. மேக்கப் இல்லாமல் ஆளே வித்தியாசமாக உள்ளார். சேலை உடுத்தி நடக்கத் தெரியாத தனக்கு இந்த டாஸ்க் கொடுத்துவிட்டாரே பிக் பாஸ் என்று ஃபீல் பண்ணியுள்ளார் யாஷிகா.

கஷ்டம்

கஷ்டம்

பிக் பாஸ் இந்த வாரம் கஷ்டமான டாஸ்க் கொடுத்துவிட்டதாக நினைக்கிறீர்களா என்று கமல் கேட்டார். அதற்கு டாஸ்க் செய்யாத மும்தாஜ் முதல் ஆளாக ஆமாம் என்றார். ஆனால் அவர் கூறியதை கமல் காதில் வாங்கவே இல்லை. டாஸ்க் கொடுத்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லும் மும்தாஜை கடிந்து கொண்டார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X