நான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா

By Siva

Recommended Video

மஹத்தை போட்டு தாக்கிய யாஷிகா - அதிரடி பேட்டி- வீடியோ

சென்னை: தான் இன்னும் மகத்தை காதலிப்பதாக யாஷகா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற இடத்தில் மகத் மற்றும் யாஷிகாவுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் மகத் தனது காதலியான பிராச்சி மிஸ்ராவிடம் திரும்பிச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து யாஷிகா கூறியிருப்பதாவது,

மக்கள்

மக்கள்

நான் டைட்டிலை வெல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்தேன். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் கூட மதியம் தூங்கவோ, ஆங்கிலத்தில் பேசவோ பயந்தேன். இதனால் தான் நான் வந்த எந்த எபிசோடையும் பார்க்கவில்லை. இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் ஹிட்டான பிறகு தமிழ் மட்டும் அல்ல தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.

இமேஜ்

இமேஜ்

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. பிக் பாஸுக்காக நம் கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வர வேண்டும், நம் இமேஜ் டேமேஜாகலாம், வெளியுலக தொடர்பே இல்லாமல் 100 நாட்கள் வாழ்வது கஷ்டம். இளைஞர்களுக்கு மட்டுமே என்னை தெரியும். அதனால் உண்மையான யாஷிகா யார் என்பதை குடும்பங்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

உடை

உடை

நான் தேவையில்லாமல் பேச மாட்டேன். நான் தைரியமாக பேசுவது, என் உடையை பார்த்து மக்கள் நான் இப்படி தான் என்று தீர்மானித்திருக்கின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளேன். பிக் பாஸ் வீட்டிலும் அப்படித் தான் செய்தேன். என் நண்பர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளேன்.

ஓட்டு

ஓட்டு

நான் பிக் பாஸ் வீட்டில் நான்கு வாரங்களுக்கு மேல் இருக்க மாட்டேன் என்று நினைத்தேன். சில நாட்களுக்கு மட்டும் தான் உடை எடுத்து வந்தேன். யாரும் எனக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நினைத்தேன். நான் மூன்று முறை கேப்டன் ஆனதில் மகிழ்ச்சி. மகத் விஷயம், என் உடை பற்றி மக்கள் கமெண்ட் அடித்தனர். தற்போது அவர்களின் எண்ணம் மாறிவிட்டதில் மகிழ்ச்சி.

காதல்

காதல்

மகத்துக்கும், எனக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அவர் ஒரு பெண்ணை காதலிப்பதை மதிக்கிறேன். அவரின் மகிழ்ச்சி எனக்கு முக்கியம். அவரிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. நான் அவரை காதலித்தேன், இப்போதும் காதலிக்கிறேன். கிராண்ட் ஃபினாலேவின்போது மகத்தின் காதலி பிராச்சியை பார்த்தேன். அவர் ரொம்ப ஸ்வீட்டானவர், மகத்தை நன்கு புரிந்து வைத்துள்ளார். அது தான் காதல் என்கிறார் யாஷிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X