சிவகார்திக்கேயனை நிறைய மிஸ்பண்றேன்: தனுஷ்

By Mayura Akilan

சிவகார்த்திக்கேயன் ஹீரோ ஆனதில் இருந்து அவரை நிறைய மிஸ் பண்றேன் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

சன் டிவியில் சூரியவணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய தனுஷ் தன்னுடன் நடித்த நடிகர்கள், தன்னுடைய படங்களைப் பற்றி தொகுப்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

தன்னை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய அண்ணன் செல்வராகவன்தான் தன்னுடைய அப்பா என்று கூறினார். அண்ணன் காட்டிய வழியில் சென்றுதான் தான் ஜெயித்ததாக கூறினார். அவர் கூறியதை மேற்கொண்டு படியுங்களேன்

எனக்கு சரியான ஜோடி

எனக்கு சரியான ஜோடி

3 படத்தில் தனக்கு நண்பராக நடித்த சிவகார்த்திக்கேயன் காமெடியில் எனக்கு ஏற்ற ஜோடி. அவர் ஹீரோவானது ஒருபுறம் சந்தோசம் என்றாலும் நிறைய வருத்தம்தான். ஒரு நல்ல காமெடியனை மிஸ்பண்ணிட்டேன். அவர் காமெடியனாகவே இருந்திருந்தால் எனக்கு சரியான ஜோடி அவர்தான்.

கவுண்டமணிதான் தலைவர்

கவுண்டமணிதான் தலைவர்

எனக்கு கவுண்டமணியின் காமெடி ரொம்ப பிடிக்கும். அவர் சினிமா முகமோ, டிவி முகமோ கிடையாது. நம்மில் ஒருவராக இருப்பார். அதுதான் அவரது வெற்றி. அவருக்கான கதையை தயார் செய்துகொண்டு கண்டிப்பாக அவர் முன்னால் போய் நிற்பேன். அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இளையராஜா உடன் போட்டோ

இளையராஜா உடன் போட்டோ

நான் இதுவரை இரண்டு பேருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒருவர் இளையராஜா மற்றொருவர் கவுண்டமணி.

நூறு கோடி வானவில்…

நூறு கோடி வானவில்…

கும்கி படத்தில் காதலியை பார்க்கும் போது எப்படி தோன்றுகிறது என்பதை சொன்ன வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நூறு கோடி வானவில் மாறி மாறி தோன்றுதே.... ஒரு காதலியின் முகத்தை இதைத் தவிர அழகாய் யாராலும் வர்ணிக்க முடியாது.

நானெல்லாம் பாடகனில்லை…

நானெல்லாம் பாடகனில்லை…

நான் இதுவரை யாரிடமும் பாட்டு கற்றுக் கொண்டதில்லை. ஏதோ எனக்கு தெரிந்ததை பாடுகிறேன். அதை இசையமைப்பாளர்கள் சரிசெய்து கொள்கின்றனர்.

நாங்களும் சராசரிதான்

நாங்களும் சராசரிதான்

டாக்டர், சாப்ட்வேர் எஞ்ஜினியர், மாதிரி நாங்களும் சராசரி மனிதர்கள்தான். சினிமாக்காரர்கள் ஸ்பெசல் கிடையாது. எங்களுக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள்தான் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் காட்டுகிறது. நாங்கள் என்ன செய்தாலும் அது பிரபலமாகிவிடுகிறது.

கிசு கிசு படிப்பதில்லை

கிசு கிசு படிப்பதில்லை

ஊடகங்களில் வரும் கிசுகிசுக்களை நான் படிப்பதில்லை. என்னைப் பற்றிய கிசுகிசுவை படித்துவிட்டு சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவேன். அதை நான் கண்டு கொள்வதில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X