மகாபாரதத்தில் ருக்மணியாக திரும்பி வந்த நீலிமா ராணி
தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக வலம் வந்தவர் நீலிமா ராணி. கொஞ்சகாலம் வில்லத்தனம் செய்தவர், பின்னர் அழுகைக்கு மாறினார். திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சீரியலில் நடித்த அவர் கொஞ்சகாலம் காணமல் போனார். திடீரென்று உடம்பை ஸ்லிம்மாக்கி, தனியாக போட்டோ ஷூட் நடத்தி "இனி நான் சினிமா நடிகை" என்றார். சினிமா வாய்ப்புகளில் தீவிரமானார்.
இப்போது சன் டிவியில் மகாபாரதம் தொடரில் ருக்மணியாக மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். ஏன் இந்த இடைவெளி என்று விசாரித்தால் அடுத்தடுத்து கிடைத்த படவாய்ப்புகள்தான் என்கிறார் நீலிமா ராணி.

பண்ணையாரும் பத்மினியும்…
பண்ணையாரும் பத்மினி படத்தில் நீலிமா ராணி பண்ணையாரின் மகளாக வந்து பண்ணும் அலப்பறைகள் தியேட்டர்களில் அப்ளாஷை அள்ள இப்போது சினிமாவில் பிசியாகிவிட்டார்.

அக்கா, அண்ணி நடிகையா?
அக்கா, அண்ணி கேரக்டருக்கு நீலிமாவை தேட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்து நீலிமா நம்பிக் கொண்டிருப்பது வை ராஜா வை படத்தை. கண்ணா லட்டு திண்ண ஆசையாவின் பார்ட் 2 இது.

போட்டோகிராபராக நீலிமா
படத்தில் பெண் போட்டோகிராபராக நடித்து காமெடியில் பொளந்து கட்டுகிறாராம். சந்தானம், சேது காமினேஷனில் படம் முழுக்க காமெடி பண்ணியிருக்கிறாராம்.

சினிமாவில் நல்ல இடம்
சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அதற்குத்தான் இந்த கால அவகாசம். கைவசம் இப்போது நான்கு படங்கள் இருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும்போல, வை ராஜா வையும் எனக்கு நல்ல இடத்தை தரும் என்று நம்புறேன்" என்கிறார் நீலிமா ராணி.

ருக்மணியாக நீலிமா
"இனி அடுத்த மூன்று வருடத்துக்கு சின்னத்திரை சீரியல் பக்கம் வருவதாக இல்லை. ஆனால் சின்னத்திரையை மிஸ் பண்ணுவதை ரொம்பவே உணர்கிறேன் என்று கூறியிருந்த நீலிமா ராணி, சன்டிவியில் மகாபாரதம் இதிகாசத் தொடரில் ருக்மணியாக நடிக்கிறார். இதிகாசத் தொடர் என்பதால் நடிக்க சம்மதம் சொன்னதாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











