ஷங்கர், பாலா கேட்டும் ‘நோ’ சொன்னேன்… ஐஸ்வர்யா

By Mayura Akilan

சின்னத்திரையின் அழகு தேவதை ஐஸ்வர்யா... சன் டிவி தொகுப்பாளினி, ஜெயாடிவி, விஜய் டிவியில் சீரியல் ஹீரோயின் என கலக்கலாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா.

நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான காலத்தில் சீரியலில் நடிக்க சொன்னவர் எப்படியோ மனம் மாறி இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் இருக்கும் போதே சினிமா வாய்ப்புகள் வரிசை கட்டி வந்தாலும் நோ சொல்லி ஒதுக்கிவிடுகிறார் ஐஸ்வர்யா. அறிமுக இயக்குநர்கள் மட்டுமல்ல ஷங்கர், பாலா கேட்டும் ஒத்துக்கொள்ளவில்லையாம். சினிமா வாய்ப்பை மறுக்க காரணம் என்ன மேற்கொண்டு படியுங்களேன்.

எந்திரனில் கிளைமாக்ஸ்

எந்திரனில் கிளைமாக்ஸ்

ஷங்கர் இயக்கிய எந்திரனில் கிளைமாக்ஸ் சீனில் நடிக்க அழைப்பு வந்ததாம். ஆனாலும் ஐஸ் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

பாலா கொடுத்த வாய்ப்பு

பாலா கொடுத்த வாய்ப்பு

ஐஸ்வர்யாவின் சீரியலைப் பார்த்துவிட்டு அவன் இவன் படத்தில் நடிக்க பாலா கேட்டாராம். ஆனால் வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அடுத்த படமான பரதேசி வாய்ப்பும் முதலில் ஐஸ்வர்யாவிற்குத்தான் வந்துள்ளது. ஆனாலும் ஏனோ மிகப்பெரிய இயக்குநர் கேட்டும் நடிக்க மனம் வராமல் ‘சாரி' சொல்லிவிட்டாராம். என்றாலும் பரதேசி படத்தின் கேசட் வெளியீட்டுவிழாவை தொகுத்து வழங்கியது ஐஸ்வர்யாதான்.

சினிமா நிகழ்ச்சிகள் தொகுப்பு

சினிமா நிகழ்ச்சிகள் தொகுப்பு

சினிமாவில் நடிக்கத்தான் பிடிக்காதே தவிர சினிமா கேசட் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ஐஸ்வர்யாதான். தொலைக்காட்சிகளில் திரைப்பட நடிகர்களை பேட்டி காண்பதும் இவர்தான்.

தேசிய விருது நிச்சயம்

தேசிய விருது நிச்சயம்

ஐஸ்வர்யா தொகுத்து வழங்கும் கேசட் வெளியீட்டு விழா திரைப்படங்கள் பெரும்பாலும் தேசிய விருது பெற்றுள்ளது. ஆடுகளம் தொடங்கி பரதேசி வரைக்கும் சென்டிமென்டலாக ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார்.

பிரச்சினைகள் அதிகம்

பிரச்சினைகள் அதிகம்

காரணம் கேட்டால் சினிமாவில் பிரச்சினைகள் அதிகம். அதேசமயம் சின்னத்திரையில் பிரச்சினைகள் குறைவு என்கிறார். நம்மை மீறி எதுவும் நடந்து விடாது என்றாலும் வேண்டாமே என்றுதான் தோன்றுகிறதாம் ஐஸ்வர்யாவிற்கு.

அம்மாதான் எல்லாமே

அம்மாதான் எல்லாமே

ஐஸ்வர்யா படித்தது எல்லாமே பெண்கள் பள்ளி, கல்லூரி. சரியான அம்மா செல்லம். சினிமாவிற்குப் போகும் போது கூட அம்மா உடன் தான் செல்வாராம்.

ஐ.ஏ.எஸ் ஆவது லட்சியம்

ஐ.ஏ.எஸ் ஆவது லட்சியம்

முன்பெல்லாம் நடிகைகள் நடிக்க வராவிட்டால் டாக்டர் ஆகியிருப்பேன் என்பார்கள். ஆனால் ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ் ஆவதுதான் லட்சியம் என்கிறார். அதற்காகத்தான் சினிமா வாய்ப்பை மறுப்பதாகவும் கூறுகிறார்.

சீரியலில் நடிக்கும் முன்பு

சீரியலில் நடிக்கும் முன்பு

நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் போது சீரியலில் நடிப்பது தனக்கு செட் ஆகாது என்று சொன்னதும் இதே ஐஸ்வர்யாதான். இப்போது வரிசையாக சீரியலில் நடிக்கிறார். இப்போது சினிமாவில் நடிக்கப் பிடிக்கவில்லை என்று கூறும் ஐஸ்வர்யா, எதிர்காலத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் மீடியா உலகத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X