மகத்தின் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன்: உண்மையை ஒப்புக் கொண்ட யாஷிகா

By Siva

Recommended Video

உண்மையை ஒப்புக் கொண்ட யாஷிகா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்த மகத்தை வில்லனாக்கி விரட்டிவிட்ட பெருமை யாஷிகா, ஐஸ்வர்யாவையே சேரும்.

பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த புதிதில் மகத் அவர் பாட்டுக்கு இருந்தார். ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தபோது தான் அவருக்கு பிரச்சனை ஏற்படத் துவங்கியது.

அந்த இரண்டு பெண்களும் சொல்வது தான் வேதம் என்று எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்டார் மகத்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

யாஷிகா காதல் என்ற பெயரிலும், ஐஸ்வர்யா நட்பு என்ற பெயரிலும் மகத்தை லூசாக்கிவிட்டனர். அவர் தனக்கென்று புத்தி இருப்பதை மறந்துவிட்டு யாஷிகா, ஐஸ்வர்யா ஆட்டிவைத்த படி எல்லாம் ஆடினார். சுயபுத்தியில்லாமல் அவர் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா போன்று பேயாட்டம் போடத் துவங்கினார். கிட்டத்தட்ட ஐஸ்வர்யாவாகவே மாறிவிட்டார் மகத்.

மகத்

மகத்

ஏதோ மகத் படங்களில் வந்தது போன்று சைட் கேரக்டராக உள்ளார் என்று நினைத்தபோது ஐஸ்வர்யா போன்றே பேய் மாதிரி ஆடி பார்வையாளர்கள் கண்ணுக்கு வில்லனாகத் தெரிந்தார். 32 வயதாகிறது அந்த பெண்கள் சொல்வதை கேட்டா ஆடுவது என்று பார்வையாளர்கள் மகத்தை கழுவிக் கழுவி ஊத்தினார்கள்.

ரித்விகா

ரித்விகா

மகத் இப்படி மோசமாக மாறியதற்கு யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தான் காரணம் என்று பார்வையாளர்கள் மட்டும் அல்ல பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள சக போட்டியாளர்களும் நினைத்தனர். காதல் கண்ணை மறைத்துவிட்டதால் மகத் ஆடுகிறான் என்று ரித்விகா கமலிடம் வெளிப்படையாகவே கூறினார். செய்வதை எல்லாம் செய்துவிட்டு மகத் கிளம்பியதும் ஒன்றுமே தெரியாதது போன்று குமுறிக் குமுறி அழுதார் யாஷிகா. நான் அவன் வாழ்க்கையை கெடுத்துவிட்டேன் என்று உண்மையை கூறினார் யாஷிகா.

தாடி பாலாஜி

தாடி பாலாஜி

அவன் வாழ்க்கையை கெடுத்துட்டாங்க அந்த 2 பேர் என்று தாடி பாலாஜி ஐஸ்வர்யா, யாஷிகா பற்றி டேனியிடம் தெரிவித்தார். மகத்தின் ஆட்டத்தை முடித்த யாஷிகா இனி இந்த ஆட்டத்தை ஆட விருப்பம் இல்லை என்று கூறி அழுததை பார்த்து யாரும் பரிதாபப்படவில்லை. மகத்தின் பிக் பாஸ் டைட்டில் கனவு தகர்ந்ததுடன் மக்கள் மத்தியில் கெட்டப் பெயரும் எடுத்துவிட்டார். மேலும் பிராச்சி மிஸ்ராவும் மகத்துடனான காதலை முறித்துக் கொண்டார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்தது மகத்துக்கு பேரிழப்பு தான் என்றே கூற வேண்டும். இமேஜ் கண்டமேனிக்கு டேமேஜாகி, காதல் வாழ்க்கை சூனியமாகி, இல்லை ஒரு வேளை யாஷிகா வெளியே வந்ததும் காதலை தொடரலாம். அதனால் காதல் வாழ்க்கை பற்றி பேச வேண்டாம். மகத்தின் சினிமா வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X