தன்மானத்திற்காக 100 கோடி ரூபாய் சொத்துக்களையே தூக்கி எறிந்தவள் நான்.. நெட்டிசன்களிடம் எகிறிய வனிதா!
Recommended Video
சென்னை: தனக்கு தன்மானம்தான் முக்கியம் என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. கணவர்களுடன் பிரச்சனை, பெற்றோருடன் பிரச்சனை, செய்தியாளர்களுடன் பிரச்சனை என அவர் செல்லும் இடமெல்லாம் பிரச்சனை பஞ்சமிருக்காது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கும் தனது வேலையை காட்டினார் வனிதா.

இருமுறை வெளியேற்றம்
இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளான வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு முறை வெளியேற்றப்பட்ட வனிதா, வெளியே வந்த ஒவ்வொரு முறையும் நெட்டிசன்களிடம் தகராறு செய்து வந்தார்.

கஸ்தூரியின் சண்டை
இம்முறை நெட்டிசன்கள் மட்டுமின்றி நடிகை கஸ்தூரியிடமும் சண்டை போட்டார் வனிதா. கஸ்தூரியை ஷட் அப் என்று சொல்லிய வனிதா, டிவிட்டரில் அவரை பிளாக் செய்தார்.

மீண்டும் டார்கெட்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன் குறித்து கருத்து தெரிவித்தார் வனிதா. ஏற்கனவே தர்ஷனுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்த நிலையில் மீண்டும் தர்ஷனை டார்கெட் செய்து டிவிட்டினார்.

ஆவேசமான வனிதா
இதனால் கடுப்பான தர்ஷன் ரசிகர்கள் அவரை விளாசினர். இதனால் கடுப்பான வனிதா, டிவிட்டரில் ஆவேசமாக கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் எனக்கு தன்மானம் தான் முக்கியம், தன்மானத்திற்காக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தூக்கி எறிந்தேன் என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.

தூக்கி எறிந்தேன்
அவர் கூறியிருப்பதாவது, என் குடும்பத்தை நன்கு அறிந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை அறிந்தவர்களுக்கும் தெரியும். கண்ணியம், பெருமை மற்றும் சுய மரியாதை ஆகியவற்றிற்காக 100 கோடிக்கு மேல் மதிப்புள்ள கோடி சொத்துக்களை நான் தூக்கி எறிந்தேன்.
துணிச்சலாக உள்ளேன்
நான் யாரையும் சாராமல் துணிச்சலாக உள்ளேன். நான் என்னையும் கடவுளையும் தான் நம்புகிறேன். இவ்வாறு வனிதா தனது டிவிட்டில் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











