சிம்ரன் மாதிரி ஹீரோயின் ஆகணும்… நீலிமா ராணி

By Mayura Akilan

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி மெகா சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நீலிமா. செல்லமே, தென்றல் தொடர்களில் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த போது பாதியிலேயே காணாமல் போனார்.

இப்போது மீண்டும் திரும்ப வந்திருக்கிறார்... சீரியல் நாயகியாக அல்ல சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.

சீரியல்களில் அழுது வடியும் கதாபாத்திரத்திலும், வில்லத்தனம் செய்யும் வில்லியாகவும் நடித்து போர் அடித்துப் போன நீலிமா அல்ட்ரா மாடர்ன் லுக்கில் நாயகியாகியுள்ளார்.

மெட்டி ஒலி

மெட்டி ஒலி

நீலிமாவை அடையாளப்படுத்திய சீரியல் மெட்டி ஒலி. தொடர்ந்து கோலங்கள், தென்றல், செல்லமே என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

தேவர் மகனில் அறிமுகம்

தேவர் மகனில் அறிமுகம்

நீலிமா குழந்தை நட்சத்திரமா நடிச்ச முதல் படம் 'தேவர் மகன்'. அப்புறம் 'பாண்டவர் பூமி', 'விரும்புகிறேன்', 'தம்', 'பிரியசகி', 'சந்தோஷ் சுப்ரமணியம்', திமிரு, 'நான் மகான் அல்ல'னு பல படங்கள்ல நடித்திருக்கிறார்.

திருமணம் குழந்தைகள்

திருமணம் குழந்தைகள்

நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் முடிந்து குழந்தை என செட்டில் ஆனவர் காஜல் அகர்வால் அட்வைஸ் படியே மீண்டும் ஹீரோயினாக நடிக்க வந்திருக்கிறாராம்.

2 வருடம் பிரேக்

2 வருடம் பிரேக்

கணவர், தோழிகளின் ஆலோசனைப் படி இரண்டு வருடம் பிரேக் எடுத்து உடம்பை ஃபிட் ஆக்கியுள்ளார். தோற்றம், பாடி லாங்குவேஜ், கூந்தல் அலங்காரம், ஸ்டைல்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து மெருகேற்றியுள்ளாராம்.

நிறைய படங்கள்

நிறைய படங்கள்

''ஸ்பீல்பெர்க், குரோசோவா, ஹிட்ச்காக், பெர்க்மன், செர்ஜி ஐசன்ஸ்டீன், பஸ்டர் கீட்டன்னு நிறைய க்ளாஸிக் இயக்குநர்களின் படங்களைத் தொடர்ந்து பார்த்த நீலிமா, 'தி ஆர்ட்டிஸ்ட்', 'கலர் ஆஃப் பாரடைஸ்', 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்', 'பைசைக்கிள் தீவ்ஸ்', 'ரஷோமோன்', 'சினிமா பாரடைஸோ' மாதிரியான க்ளாஸிக் படங்களைப் பார்த்தாராம்.

ஹீரோயின் தகுதி

ஹீரோயின் தகுதி

ஜிம் உடலை மாற்றினால், சினிமாவும் அது தொடர்பான புத்தகங்களும் நீலிமாவிற்கு உதவியாக இருந்ததாம். ஒரு ஹீரோயினுக்கான தகுதிகள் இப்போ எனக்கு இருக்கு என்கிறார் நீலிமா.

சந்தோசம்தான் அழகு

சந்தோசம்தான் அழகு

நீலிமாவிற்கு சிம்ரன் மாதிரி நடிக்க ஆசையாம். இதற்காக சிம்ரன் மாதிரியே ஸ்லிம் பியூட்டி ஆகியுள்ளார். டயட்டுடன் எப்பவும் ஜாலியா சிரிச்சுட்டு மனசை சந்தோஷமா வைத்துக் கொள்வதுதான் அழகு என்கிறார் நீலிமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X