கவர்ச்சி வேண்டாம்… காமெடி மட்டும் போதும்… நடிகை மதுமிதா
ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்தின் ஜோடியாக கலக்கிய மதுமிதா சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குப் போனவர்தான். தற்போது மீண்டும் சின்னத்திரையில் காமெடி சீரியல்களில் நடித்து வருகிறார்.
ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "சூப்பர் காமெடி' நிகழ்ச்சிதான் இவரது மீடியா அறிமுகம். தொடர்ந்து "லொள்ளு சபா', "காமெடி பஜார்', "சூப்பர் 10', "மாமா மாப்ளே' என காமெடி சீரியல்களில் நடித்துள்ளார்.

சிவா மனசுல சக்தி படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து "ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் ஆடிஷனுக்கு சென்ற போது சந்தானத்துடன் நடிக்க தேர்வானாராம்.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்
"ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பின்னர் அட்டக்கத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகி என்று கூறி அழைத்தார்களாம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம் மதுமிதா. இப்போது முனி-3, "வெள்ளைக்கார துரை' உள்பட சில படங்களில் நடித்து வருகிறாராம்.
மீண்டும் சீரியல்
கலைஞர் டிவியில் ராம்ஜி, நளினி நடித்த மடிப்பாக்கம் மாதவன் காமெடி தொடரிலும் நடித்துள்ளேன்.
அதிர்ஷ்டம் தேவை
சிறந்த காமெடி நடிகையாக வேண்டும். அதற்கு நம்பிக்கையும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது. எல்லாத்துக்கும் மேலாக அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் சினிமாவில் ஜெயிக்கவே முடியாது என்கிறார் மதுமிதா.
மனோரமா, கோவை சரளா போல
மனோரமா, கோவை சரளாவுக்குப் பிறகு அவ்வளவாக காமெடி நடிகைகள் யாரும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கவில்லை. அவர்கள் பெயருக்குப் பின்னால் என் பெயர் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
ஹீரோயின் ஆசை
சின்னச் சின்ன படங்களில் நாயகி வாய்ப்பு வந்தது. ஆனால், நான் நினைத்தது போல் இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. "சதிலீலாவதி'யில் கோவை சரளா நடித்தது போல காமெடியான கதாநாயகி என்றால் நான் தயார் என்கிறார் மதுமிதா.


Click it and Unblock the Notifications











