For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகை நீபா... பெரிய திரை டூ சின்னத்திரை டூ பெரிய திரை!

By Mayura Akilan
|

Neepa
பெருசு படத்தின் மூலம் நாயகியாக வந்தவர் நீபா. அம்மாவும் அப்பாவும் நடன இயக்குநர்களாக இருந்தும் நடனம் பக்கம் செல்லாமல் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் களமிறங்கினார். ஆனால் சினிமாதுறை கை கொடுக்கவில்லை. சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தினார். பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாய்ப்புகள் வந்தன. தங்கர்பச்சன் இயக்கிய பள்ளிக்கூடம் படத்தில் சீமானுக்கு ஜோடியானார். காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியானார்.

இப்பொழுது அதேபோல் பேசப்படும் கதாபாத்திரம் ஒன்று விக்ரம் நடிக்கும் கரிகாலன் படத்தில் கிடைத்திருக்கிறதாம். உறவுகள் தொடரில் சுவேதாவாக நடித்தவருக்கு பதிலாக இப்போது நீபா நடிக்கிறார். 750 வது எடிசோடுகளை தாண்டி உறவுகள் போய்க்கொண்டிருக்கிறது. சூட்டிங் பிஸியில் இருந்தவரிடம் பேசியதில் சிக்கியவை.

ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினேன். சீரியலில் நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. நடிக்க மட்டுமே வாய்ப்புகள் நிறைய உண்டு.

உறவுகள் தொடரில் இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைய இருக்கு. ஆயிரம் எபிசோடுகளை நிச்சயம் தாண்டும் என்று கூறினார். காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியா காமெடியில் கலக்கினதைத் தொடர்ந்து, விக்ரமோட 'கரிகாலன்' படத்துலயும் ஒரு சூப்பர் ரோல் கிடைச்சிருக்கு என்று கூறினார்.

ஆல் த பெஸ்ட் நீபா! கலக்குங்க!

English summary
Actor Neepa is acting guest role in karikalan film . Neepa says, if one had decided to become an actor either he or she should fully try to become a part of the celluloid world. There should not be second thought to go back from the film industry after having acted in serials or films.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more