For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நல்லா டான்ஸ் ஆடனும்.. நிவேதிதாவின் ஆசை!

  By Mayura Akilan
  |

  - ஜெயலட்சுமி சுப்ரமணியன்

  சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைப்பது போலவே இருக்கிறது நிவேதிதா பேசும் அந்த அழகுத் தமிழ்... உள்ளம் கொள்ளை கொள்ளும் வெள்ளைச் சிரிப்பு... கேட்கும் கேள்விகளுக்கு முதலில் ஒரு பளிச் புன்னகை.. பின்னர் சிக்கென்று ஒரு பதில்... வாவ்!

  டிவியில் பளிச்சென வந்து போன இந்த அழகுப் பெண்ணைப் பார்த்தபோது, அடடா அழகே அழகே என்று தோன்றியது. உடனே போனை எடுத்து, சந்திக்கலாமா, சற்றே பேசலாமா என்று கேட்டபோது, வாங்க என்று அழகுக் குரலில் வந்தது பதில்.

  பாலிமர் டிவியின் செய்தி வாசிப்பாளர்தான் நிவேதிதா. செய்தி வாசித்து முடித்த கையோடு நம்மோடு வந்து அமர்ந்தார் உரையாட. சின்னத்திரையில் தன்னுடைய அனுபவங்களையும், எதிர்காலத் திட்டங்கள், ஆசைகள், லட்சியங்கள் என நிறைய பேசினார்... கேளுங்களேன்.

  பொறியாளர் ஆக ஆசைப்பட்டேன்

  பொறியாளர் ஆக ஆசைப்பட்டேன்

  நான் பக்கா சென்னை பொண்ணு... ஸ்கூல்ல படிக்கும் போது என்ஜீனியர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால் ப்ளஸ் டூ முடித்த உடன் கிடைத்தது விஸ்வல் கம்யூனிகேசன்தான். அப்போதிருந்தே மீடியாவில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

  எதாக இருந்தாலும் ஜெயிக்கனும்

  எதாக இருந்தாலும் ஜெயிக்கனும்

  விஸ்காம் முடித்த கையோடு சின்னத்திரைக்கு வந்துவிட்டேன், செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பிஸியாக இருந்தாலும் எனக்கு டெக்னிக்கலாக ஜெயிக்கவேண்டும் என்பதுதான் ஆசை... பிசிஆர் பகுதியில் (ப்ரோகிராம் கண்ட்ரோல் ரூம்) வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து அதையும் பழகி வருகிறேன். விசுவல் எடிட்டிங் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

  தமிழ் மாட்லாடும் தெலுங்கு பெண்

  தமிழ் மாட்லாடும் தெலுங்கு பெண்

  தெலுங்குப் பெண் நான். எனக்கு சுத்தமாக தமிழ் படிக்கத் தெரியாது. கிறிஸ்டோபர் என்ற என்னுடைய நண்பர்தான் செய்தி வாசிப்பது பற்றி கற்றுக் கொடுத்தார். ஒரு வருடம் தமிழ் எழுத படிக்க பயிற்சி எடுத்துக் கொண்டேன். முதலில் என்.டி.டிவி ஹிந்துவில் செய்தி வாசித்தேன். இப்போது பாலிமர் டிவியில் செய்தி வாசிப்புடன் நிகழ்ச்சித் தொகுப்பும் செய்து வருகிறேன்.

  வீட்டிலேயே நிறைய சுப்புடுக்கள்...

  வீட்டிலேயே நிறைய சுப்புடுக்கள்...

  அப்பா ஆட்டோ டிரைவர், அம்மா இல்லத்தரசி, தம்பி இரண்டாம் ஆண்டு பிகாம் படித்துக் கொண்டிருக்கிறான். என்னுடைய முதல் விமர்சகர்கள் அம்மாவும் தம்பியும் தான். நன்றாக நியூஸ் வாசித்தால் கூட இன்னும் கொஞ்சம் பெஸ்டா வாசித்து இருக்கலாமேப்பா என்பான் தம்பி. அவனை திருப்திப்படுத்துவது அத்தனை சுலபமில்லை. தம்பி என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் மட்டுமல்ல எனிமியும் கூட.

  அம்மா கொடுத்த சுதந்திரம்

  அம்மா கொடுத்த சுதந்திரம்

  வீட்டில் எனக்கு நிறைய சுதந்திரம். அப்பா அதிகம் செல்லம் கொடுக்கமாட்டார். அதே சமயம் ரொம்ப கண்டிக்கவும் மாட்டார். அம்மாவுக்கு என்மீது அதீத நம்பிக்கை இருக்கு. எதையுமே செய்யாதே என்று தடுக்க மாட்டார். மனதிற்கு பிடித்தால் அதை செய் என்று சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

  கடைசி வரை போராடு

  கடைசி வரை போராடு

  எந்த விசயமாக இருந்தாலும் கடைசி வரை போராடணும், முட்டி மோதி பாத்திரு என்பார் என் அம்மா. அவர் கொடுத்த தைரியம்தான் மீடியாவில் நான் ஜெயிக்க காரணமாக இருக்கிறது. எதைக்கண்டும் பயப்படக்கூடாது என்பார்.

  சீரியல் ஓ.கே.

  சீரியல் ஓ.கே.

  சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பு, செய்தி வாசிப்பு என்று வந்த பின்னர் சீரியல்தான் அடுத்த கட்டமாக இருக்கும். எனக்கு சீரியல் வாய்ப்பு இதுவரை வரவில்லை. அப்படி வரும் பட்சத்தில் கண்டிப்பாக நடிப்பேன்.

  சினிமா செட் ஆகாதுப்பா

  சினிமா செட் ஆகாதுப்பா

  பதில்: சின்னத்திரையில் நடித்தாலும் சினிமா வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நோ என்றுதான் சொல்வேன். ஏனெனில் சினிமா லைப்ஸ்டைல் வேறு. சின்னத்திரையில் நமக்கு சுதந்திரம் இருக்கும். சீரியலில் அது கிடைக்காது.

  ரியாலிட்டி ஷோ செய்வேன்

  ரியாலிட்டி ஷோ செய்வேன்

  நான் நன்றாக நடனமாடுவேன். பள்ளி, கல்லூரி நாட்களில் நடனப் போட்டியில் வெற்றி பெற்று நிறைய சர்டிபிகேட், பரிசுக் கோப்பைகளை வாங்கியிருக்கிறேன். எனவே ரியாலிட்டி ஷோ, நடனப்போட்டி, மேடைகளில் நடனமாக ஆசை, என்னுடைய கனவு என்று கூட சொல்வேன். அது ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறிவிட்டு அழகாய் சிரித்தார் நிவேதிதா.

  கனவு நிறைவேற வாழ்த்துக்கள் கூறி கிளம்பினோம்....!

  English summary
  Polimer tv anchor Nivethitha wants to participate in reality shows.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X