சூதாட்டத்திற்கு அடிமையாகி பணம், காரை இழந்த பிரபல டிவி நடிகர்

By Siva

மும்பை: சூதாட்டத்தால் தான் மோசமான நிலைக்கு வந்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகர் விவேக் தாஹியா தெரிவித்துள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் விவேக் தாஹியா. அவரின் மனைவி பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா த்ரிபாதி. விவேக் ஒரு காலத்தில் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

விவேக்

விவேக்

2006ம் ஆண்டு எனக்கு 19 வயது இருந்தபோது நான் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டேன். நான் இங்கிலாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது பகுதி நேரமாக வேலை பார்த்தேன். ஒரு நாள் என் நண்பன் கசினோவுக்கு அழைத்துச் சென்றார். முதல் நாளே நான் பணம் வென்றேன். நான் ஒரு வாரம் உழைத்தால் கிடைக்கும் பணத்தை அன்று ஒரே நாளில் வென்றேன்.

கசினோ

கசினோ

அதன் பிறகு வேலை முடிந்த பிறகு நேராக கசினோவுக்கு சென்றுவிடுவேன். அங்கு வேலை பார்த்த சிலர் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். இந்த சூதாட்டம் மோசமானது, வேண்டாம் என்று அவர்கள் என்னை எச்சரித்தார்கள். நான் அவர்களின் பேச்சை கேட்காமல் சூதாடினேன். ஒரு மாத சம்பளத்தை அப்படியே வைத்து சூதாடியிருக்கிறேன். ஒரு முறை சூதாட பணம் இல்லாததால் என் கார் சாவியை ஒருவரிடம் அளித்து பணம் கேட்டேன்.

டாக்சி

டாக்சி

ஒரு நாள் இரவு நான் நிறைய பணத்தை சூதாடி இழந்தேன். வீட்டிற்கு கேபில் செல்ல மட்டுமே பணம் இருந்தது. கேப் டிரைவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சூதாட்டம் எப்படி இருந்தது என்று அவர் கேட்டார். நான் பணத்தை இழந்த கஷ்டத்தில் இருந்ததால் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் தன் வாழ்வில் நடந்ததை தெரிவித்தார்.

குடும்பம்

குடும்பம்

கேப் டிரைவர் படிப்பறிவு இல்லாதவர். இங்கிலாந்திற்கு வந்து கேப் ஓட்டி பணம் சேர்த்து சொந்தமாக ஒரு வாகனம் வாங்கியுள்ளார். அதன் பிறகு இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடினமாக உழைத்து 7 கேப்கள் வாங்கியுள்ளார். இந்நிலையில் அவரின் நண்பர் ஒருவர் அவரை கசினோவுக்கு அழைத்துச் செல்ல சூதாட்டத்திற்கு அடிமையாகி சம்பாதித்த அனைத்தையும் இழந்துவிட்டார். இதையடுத்து அவரின் மனைவி 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரை விட்டுச் சென்றுவிட்டார்.

வாலிபர்கள்

வாலிபர்கள்

கேப் டிரைவர் கூறியதை கேட்ட பிறகு நான் கசினோவுக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். சூதாட்டம், போதைப் பொருளுக்கு அடிமையாக உள்ள வாலிபர்கள் அதை மறுக்காமல் உரிய உதவியை தேடிச் சென்று குணமடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என விவேக் தாஹியா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X