இது முடிவல்ல... நிறைவு... பிக் பாஸ் மூன்றிலும் நான் இருப்பேன்: கமல்

சென்னை: பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியையும் தான் தொகுப்பு வழங்குவேன் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதில் நடிகர் மகன், தேவர்மகன் பட ஸ்டைலில் வேட்டி சட்டையும் வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

I will be there in bigg boss 3 also: Kamal

நிகழ்ச்சியின் தொடக்கமாக கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியின் துவக்க உரையாற்றிய கமல், அந்த கலைஞர்களுக்கு நன்றி கூறினார்.

அப்போது பார்வையார்களில் இருந்த ஒருவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனையும் நீங்கள் தொகுத்து வழங்குவீர்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த கமல், "நான் பண்ணணுமா வேண்டாமா" எதிர் கேள்விக் கேட்டார்.

அதற்கு அந்த ரசிகர் தொகுத்து வழங்க வேண்டும் என கூறினார். அவருக்கு பதிலளித்த கமல், "பண்ணிட்டா போச்சு" எனக் கூறினார்.

இதன் மூலம் பிக் பாஸ் 2 சீசனை அடுத்து கமல் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என பேசப்பட்டு வந்த விஷயத்துக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் அவர்," இன்றைய நாளை சீசன் 2ன் முடிவு என்று சொல்வதைவிட நிறைவு என்றே சொல்லலாம். எனக்கும் சேர்த்து எல்லோருக்குமே இந்நிகழ்ச்சி நிறைவை தந்திருக்கிறது.

டிவி பார்ப்பதால் மறந்துபோன பாரம்பரிய கலைகளை ஞாபகப்படுத்த தான் இந்த ஏற்பாடு.

பிக் பாஸ் நிகழ்ச்சி மீதும் என் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். சில விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. சில காலம் கழித்து அதுவே தானாக மறைந்துவிடும். நான் ஒரு சாட்சி பூதமாக இதை பார்த்துக்கொண்டிருகிறேன்.

நான் எல்லோரையும் சமமாக தான் பார்க்கிறேன். நான் சிலர் பிரித்து பார்க்கிறார்கள். ஆர்மியாக பிரிந்து மோதிக்கொள்ளுவதை பார்க்கிறேன்.

இது நிறைவு தரும் விழாவாக அமைந்திருக்கிறது. இந்த 106 நாட்களும் ஒரு நல்ல பயணம்.

எனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் இல்லை. அப்படி இருந்திருந்தால் எளிதாக பிரபலமாகும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வேண்டும் என எனக்கும் ஆசை தான்.

இது ஒரு அரிய வாய்ப்பு. தன்னை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நினைக்கும் கலைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.

இந்த மேடையில் நான் நானாக உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த தருணம் தான் எனக்கு மிகவும் பிடித்தத் தருணம்", எனக்கூறி கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை கமல் தொடங்கி வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X