பச்ச பச்சையா கேட்பேன்.. அசிங்க அசிங்கமா பேசுவேன்.. என்னை பத்தி உங்களுக்கு தெரியல.. மிரட்டிய மீரா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 22 : Promo1 : மீரா தர்ஷனை காதலித்தால் ஷெரினுக்கு என்ன?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா நான் பச்சை பச்சை கேட்பேன் அசிங்க அசிங்கமாக பேசுவேன் ஆக்ரோஷமாக பேசியது மிரள வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் இருந்த வனிதாவுக்கு மக்கள் மிகக் குறைந்த வாக்குகளை அளித்ததால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு கேங்கை உருவாக்கிக் கொண்டு சிலரை குறி வைத்து சண்டை போட்டு வந்தார் வனிதா. வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் குறித்து ஹவுஸ் மேட்ஸ்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

சண்டை போட ஆள் இல்லை

சண்டை போட ஆள் இல்லை

லிவிங் ஏரியாவில் கவின், சரவணன், சாண்டி, மீரா ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எவ்வளவு டஃப் ஆன கன்டெஸ்டன்ட்டை இப்படி தூக்கிவிட்டார்களே என்றார் கவின். மேலும் இப்போது சண்டை போட ஆள் இல்லை என்றும் கூறினார் கவின்

நீயெல்லாம் ஓடிவிடுவாய்

நீயெல்லாம் ஓடிவிடுவாய்

அதற்கு பதிலளித்த மீரா அதான் நான் இருக்கேனே என்னிடம் சண்டைபோடுங்கள் என்றார். அப்போது கவின் நீயெல்லாம் சண்டை என்று வந்தால் பத்து பாயிண்ட் பேசுவதற்குள் இடத்தை விட்டு கிளம்பி விடுவாய்.

மற்றவர்களை ஓடவிடுவார்

மற்றவர்களை ஓடவிடுவார்

ஆனால் வனிதா அக்கா கடைசி வரை நின்று சண்டை போடுவார். அவருக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்கிறார் கவின். மேலும் வனிதா மற்றவர்களை தான் ஓட விடுவார். அவர் எப்போதும் ஓடியதில்லை என்றார்.

அசிங்க அசிங்கமாக கேட்பேன்

அசிங்க அசிங்கமாக கேட்பேன்

உடனே ஆக்ரோஷமான மீரா, என்னை பற்றி உங்களுக்கு தெரியாது. நான் பச்ச பச்சையாக கேட்பேன், அசிங்க அசிங்கமாக கேட்பேன், நாக்க புடுங்கிக்கிட்டு சாகுற மாதிரி ஒவ்வொரு கேள்வியும் கேட்பேன் என ஆக்ரோஷமாக பேசினார் மீரா.

மிரட்டிய மீரா

மிரட்டிய மீரா

யாரை கேட்பாய் என கவின் கேட்க, என்னை யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களை பச்சை பச்சையாக பேசுவேன். வயசு வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் என்று மிரட்டும் வகையில் கூறினார் மீரா.

சேரனுடன் பிரச்சனை

சேரனுடன் பிரச்சனை

மீரா அப்படி பேசியது சேரனை என தெரிகிறது. ஏனெனில் சேரனுடன்தான் மீராவுக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வயசு வித்தியாசம் இல்லாமல் அசிங்க அசிங்கமாக பேசுவேன் என்று சேரனை குறிப்பிட்டே மீரா பேசியதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X