twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில்லியாக மாற ஆசை… சின்னத்திரை நடிகை கவிதா

    By Mayura Akilan
    |

    கதாநாயகியாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பதுதான் சவாலான விசயம். எனவே சீரியலில் வில்லத்தனம் செய்வதுதான் என்னுடைய விருப்பம் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கவிதா.

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக கடந்த 15 ஆண்டுகளாக சீரியல் உலகில் சிறந்த நடிகையாக அறியப்பட்டு வரும் கவிதா அழகு மட்டுமல்ல நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர்.

    சன் தொலைக்காட்சியில் சக்தி தொடரில் அறிமுகமாகி இப்போது இல்லத்தரசி வரை பல தொடர்களில் நடித்துள்ள கவிதா தன்னுடைய சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

    குழந்தையாக நடித்தேன்...

    குழந்தையாக நடித்தேன்...

    அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவம் சினிமாவைப் பற்றிய ஆசையை உண்டாக்கியது. அதிலிருந்து இன்றைக்கு வரைக்கும் மீடியா உலகில் நான் ஸ்டாப்பாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

    சீரியல் அறிமுகம்

    சீரியல் அறிமுகம்

    சினிமாவில் அறிமுகமானாலும் சீரியல்தான் கை கொடுத்தது. சன் டி.வி-யில ஒளிபரப்பான 'சக்தி' சீரியலில் 'மேகா' வாக அறிமுகமானேன்.

    15 வருட பயணம்

    15 வருட பயணம்

    முதல் சீரியலிலேயே நல்ல பெயர் கிடைக்கவே 15 வருஷமாக சின்ன 'பிரேக்'கூட எடுத்துக்க நேரம் இல்லாம தொடர்ந்து சீரியல் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

    இனிய இல்லத்தரசி

    இனிய இல்லத்தரசி

    சக்தியைத் தொடர்ந்து 'கோலங்கள்', 'ஆனந்தம்', 'மருதாணி'னு நல்லபடியா போயிட்டிருக்கு, இப்போ 'இல்லத்தரசி' சீரியலில் நடிக்கிறேன். சினிமா மாதிரி விறுவிறுப்பான திரைக்கதை. இந்த சீரியல்ல என்னோட கேரக்டர் பெயர் 'கனகா'. ஆரம்பத்துல நெகட்டிவ், அடுத்தடுத்து பாஸிட்டிவ்னு மாறும் ரோல். இயக்குநர் ராமலிங்கம் சாருக்கும், தயாரிப் பாளர் கோவிந்தராஜ் சாருக்கும் நன்றி சொல்லணும் என்றார் கவிதா.

    கூந்தல் அழகி

    கூந்தல் அழகி

    இயற்கையிலேயே நீளமான அழகான கூந்தல் கவிதாவிற்கு உண்டு. பின்னல் போடாமல் சீரியலில் நடிப்பது கவிதாவிற்கு கூடுதல் அழகைத் தரும். எப்படி இத்தனை அழகு என்று கேட்டால் வாரம் மூன்று முறை தலைக்கு குளிப்பாராம். மாதம் ஒருமுறை மருதாணி போடுவாராம்.

    கவிதாவின் டிப்ஸ்

    கவிதாவின் டிப்ஸ்

    ''தயிர், டீ டிகாக்ஷன், மருதாணி, பீட்ரூட் துருவல் எல்லாத் தையும் ஒரு முறை பயன்படுத்த தேவையான அளவுக்கு முதல் நாள் இரவே மிக்ஸ் செய்து வெச்சுடணும். மறுநாள் காலை அந்தக் கலவை யில முட்டையோட வெள்ளைக்கருவை மட்டும் (விரும்பினால்) சேர்த்து கூந்தல்ல தேய்ச்சு, மூணு மணி நேரத்துக்கு அப்புறம் அலசணும். இதுதான் பளபள கூந்தலின் ரகசியம் என்று டிப்ஸ் கூறி சிரித்தார் கவிதா.

    வில்லி ஆசை

    வில்லி ஆசை

    என்னதான் கதாநாயகியாகவோ, நல்ல பாஸிட்டிவான கதாபாத்திரத்திலோ நடித்தாலும் 'எல்லாரும் திட்டித் தீர்க்குற மாதிரி ஒரு வில்லி கேரக்டர் பண்ணணும்னு ஆசை. ஆனா, 'அதெல்லாம் சரிப்பட்டு வராது'ன்னு தோழிகள் எச்சரிக்கிறாங்க. அதான், யோசனையாவே இருக்கு! என்றார். அது மாதிரி கிடைத்தால் நல்லா இருக்கும் என்றார். வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

    English summary
    Serial actress Kavitha loves to play negative roles in TV serials.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X