அப்படி நடந்திருந்தால் நான் நானி கூனி பிக் பாஸில் இருந்து விலகியிருப்பேன்: கமல்
சென்னை: அந்த விஷயம் நடந்திருந்தால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகியிருந்திருப்பேன் என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் அங்கேயே தான் இருக்க வேண்டும். அவர்களால் மேடைக்கு வந்து கமலை கூட நேரில் பார்க்க முடியாது.
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தீயாக பரவியது.

பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் விருப்பப்படும்போது வெளியே சென்று வருகிறார்களாம். அதிலும் குறிப்பாக பொன்னம்பலத்தை வட பழனி, சாலிகிராமத்தில் மக்கள் பார்த்ததாக கூறுகிறார்களே என்று ஒருவர் கமலிடம் கேட்டார்.

வதந்தி
போட்டியாளர்கள் வெளியே சுற்றுவதாக கூறப்படுவது வெறும் வதந்தி என்றார் கமல். அப்படி பார்த்திருந்தால் செல்போனில் ஒரு போட்டோ எடுத்திருக்கலாமே. எடுத்திருந்தால் நாம் அதை பற்றி பேச வேண்டிய தேவையே இல்லையே என்று மேலும் கூறினார்.

வெட்கம்
இந்தா பாருங்க பொன்னம்பலம் வெளியே சுற்றுகிறார் என்று அந்த போட்டோவை என்னிடம் காட்டியிருக்கலாம். அதை பார்த்து நான் நானி, கூனி தலை குனிந்திருப்பேன். நான் இத்துடன் இந்த ஷோவை விட்டுவிடுகிறேன் என்று சொல்ல வேண்டி இருந்திருக்கும் என்றார் கமல்.

கேள்விகள்
நீங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்கு கமலோ, நான் எங்கிருந்தாலும் ஒரே மாதிரி தான் இருப்பேன். என்னை எங்கு வைத்தாலும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார். தனது வாழ்க்கை திறந்த புத்தகம் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications











