பிந்து மனதில் நவீன்.. பிச்சு உதறும் காதல்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்!

By Velsamy

சென்னை: நிஜக் காதலர்கள் ஆக மாறியுள்ளனர் ஒரு டிவி சீரியலில் வந்த ரீல் காதலர்கள்.

அதுவும் கலர்ஸ் டிவி மூலமாக பல பேர் இதயத்தை கொள்ளை கொண்ட இதயத்தை திருடாதே சீரியல் ஜோடிகளான சஹானா - சிவா கேரக்டருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது.

இவர்கள் காதலர் தினத்துக்காக போட்டுள்ள வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர்களை கொஞ்சி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

ரீல் டு ரியல் ஜோடிகள்

ரீல் டு ரியல் ஜோடிகள்

சீரியல்களிலும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிது அல்ல .ஆனாலும் பலர் இந்த வாழ்க்கை முறையை கையாண்டு வருகிறார்கள். சீரியல்களில் தொடர்ந்து பல வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பதால் இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்களுக்கு நன்றாகவே பிடித்து விடுகிறது.

ரசிகர்களும் காரணம்

ரசிகர்களும் காரணம்

அதனால் ரசிகர்கள் பலர் இவர்கள் ரீல் லைஃப் காதலர்கள் என்பதையே மறந்து ரியல் லைப் நினைத்து விடுகிறார்கள்.. அதுவும் சிலரைப் பார்க்கும்போது ரியல் லைப்பில் இந்த மாதிரி இவர்கள் சேர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் ஆசைப்பட்டு வருகிறார்கள். ரசிகர்கள் ஒருவிதத்தில் நடிகர்களுக்கு காதலுக்கு காரணமாக ஆகிவிடுகிறது.

இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே

தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே என்னும் சீரியல் மூலமாக பல பேர் இதயத்தை கொள்ளை கொண்ட ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் சிவாவாக நடிக்கும் நவீன் குமார், சஹானாவாக நடிக்கும் பிந்து ஹேமாவும் உண்மையிலேயே காதலர்களாக மாறி இந்த காதலர் தின கொண்டாட்டத்தை கலர்ஸ் டிவியில் கொண்டாடி பகிர்ந்து இருக்கின்றனர்.

வைரலாகும் வீடியோக்கள்

வைரலாகும் வீடியோக்கள்

தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த இந்த சீரியலின் ரசிகர்களும் செமையாக என்ஜாய் பண்ணி வருகிறார்கள். இந்த ஜோடியை பார்க்கும்போது இளைஞர்களுக்கு ரொம்பவே பிடித்த ஜோடியாக தான் இவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் காதலை மற்றும் நடிப்பையும் பிடித்த ரசிகர்கள் இவர்கள்தான் தங்களுடைய ஸ்டேட்டஸ் களில் சாங்காக எடிட் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்கள்

மாணவர்கள்

கல்லூரி மாணவிகள் முதல் இளைஞர்கள் வரை பலர் இந்த சீரியலுக்கு அடிமையாக இருக்கின்றனர் .இந்த சீரியல் மராத்தி சீரியலின் ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால்தான் நாளுக்குநாள் இதன் பிஆர்பி ரேட்டின் கூடிவருகிறது. முதலில் முட்டிக்கொண்டு தற்போது திருமணமாகி அதன்பிறகும் சண்டை போட்டுக் கொண்டிருந்த சஹானா தற்போது சிவாவை புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்து இருக்கிறார் .

ரசிக்க வைக்கும் விறுவிறுப்பு

ரசிக்க வைக்கும் விறுவிறுப்பு

இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும்போது இவர்களின் காதல் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்து அனைவரும் ரசிக்கும்படி இருப்பதால் இதற்காக ரசிகர்கள் நாளுக்குநாள் கூறிவருகிறார்கள் .இந்த சீரியலுக்காக தான் பலர் கலர்ஸ் டிவியை பார்த்து வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமல்லாமல் வயதான சீரியல் ரசிகர்களும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள்.

காதலர் தின கொண்டாட்டம்

காதலர் தின கொண்டாட்டம்

அனைத்து சேனல்களிலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு சிறப்பு நிகழ்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது கலர்ஸ் டிவியும் அதே பாணியை கையாண்டு இருக்கிறது .விஜய் டிவியில் மட்டும் தான் சும்மா இருப்பவர்களை சேர்த்துவைத்து காதலர்களாக மாற்றி திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உண்டு. தற்போது அந்த பாணியை கலர் டிவியும் கையிலெடுத்து இருக்கிறதா என்று சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மாஸ் என்ட்ரி

மாஸ் என்ட்ரி

நெட்டிசன்கள் கலாய்த்தாலும் காதலர் தினக் கொண்டாட்டத்தில் தேவதையாக மாறி சிவாவுக்காக காத்திருக்கும் சஹானா . சஹானாவின் காத்திருப்புக்கு மாஸ் என்ட்ரி கொடுத்து காரில் வந்து இறங்கி பட்டையை கிளப்பிய சிவாவின் ஸ்டைலான பெர்பாமன்ஸ்ஸை பல பேர் தங்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கின்றனர். எப்படியோ நல்லா போகுது பொழப்பு!

More from Filmibeat

Read more about: colors tv serial
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X