கமல் வாய்ப்புக் கொடுத்தால் நடிப்பேன்…. அமெரிக்கா ரிட்டன் 'விருமாண்டி' அபிராமி!
நடிகை அபிராமி.... புதுயுகம் சேனலில் ரிஷிமூலம் விவாத நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்.
பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே மீடியா உலகை விட்டு விலகி அமெரிக்காவிற்குப் படிக்கப் போனார். தற்போது ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக வந்திருக்கிறார்.
சினிமாவைவிட சின்னத்திரையின் தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் அபிராமி. சினிமாவில் கமல் வாய்ப்புக் கொடுத்தால் மறுக்கமாட்டேன் என்கிறார்.

அமெரிக்க வாழ்க்கை
அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு மிகப்பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட்ஆக வேலை செய்திருக்கிறார் அபிராமி. அங்கு படித்து வேலை பார்த்த 5 ஆண்டுகளில் 27 நாடுகளை சுற்றிப் பார்த்திருக்கிறாராம்.

தடுத்த கமல்
விருமாண்டி படத்தில் கமலின் நாயகி அபிராமி. அமெரிக்கா சென்று படிக்கப் போவதாக கூறிய உடன் தடுத்து அட்வைஸ் செய்தாராம். தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள அபிராமி, கமல் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தால் நடிப்போன் என்கிறார்.

விஸ்வரூபத்தில் டப்பிங்
விஸ்பரூபம் முதல் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் கொடுத்தவர் அபிராமி. இப்போது விஸ்வரூபம் பார்ட் 2விலும் அபிராமி டப்பிங் பேசியுள்ளார்.

சமூகத்திற்கு நன்மை
ரிஷிமூலம் விவாத நிகழ்ச்சி சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் நிகழ்ச்சி. வேலை செய்வது முக்கியமில்லை. மனசுக்குப் பிடித்தமான வேலையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இயக்குநருடன் காதலா
அமெரிக்கா போன உடன், பிரபல இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டதாக பல வதந்திகள் பரவின. அதை மறுத்துள்ள அபிராமி, வதந்திகளைப் பற்றி கவலைப்படவில்லை என்கிறார்.


Click it and Unblock the Notifications











