Nila serial: நீலாம்பரி ஒரு பிளான் போட்டா...நிலா சூப்பர் பிளானா?

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி ரொம்ப அழகா இருக்காங்க. இவங்களுக்காகவே பல பேர் நிலா சீரியலை விரும்பிப் பார்க்கறாங்க. நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு கனக் கச்சிதமா பொருந்தி இருப்பதும் பார்க்க நல்லாருக்கு.

நிலாவின் அப்பா ஸ்ரீதரை நீலாம்பரி லவ் டார்ச்சர் செய்த போதுதான், அவருக்கு கல்யாணம் ஆகி, பெண் குழந்தை இருப்பதை ஸ்ரீதர் சொல்றார். இருவரும் தொழில் பார்ட்னரா இருந்தவங்க.

ஸ்ரீதர் கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்ச உடனே சொத்து, முழுவதும் தனக்கே வரணும், தொழிலதிபரா தான் மட்டும்தான் இருக்கணும்னு நினைச்ச நீலாம்பரி ஸ்ரீதரை கொன்னுட்டதா நினைச்சுகிட்டு இருக்காங்க.

பொண்ணு இல்லை.

பொண்ணு இல்லை.

ஸ்ரீதர் தனது சொத்துக்களை நிலாதான் அனுபவிக்கணும்னு உஷாரா உயில் எழுதி வச்சுட்டா, நிலாவை தனது மருமகளாக்கிக்க துடிக்கறாங்க. ஒரு வழியா நீலாம்பரியின் பிளானைத் தெரிஞ்சுக்கிட்ட, உண்மையைப் புரிஞ்சுக்கிட்ட நிலா, நீலாம்பரியின் தம்பியை கல்யாணம் செய்துக்கிட்டதா சொல்லி, அவங்க வீட்டு மருமகளா வீட்டுக்குள் போறா. நீலாம்பரியின் குருஜி, நிலா சாதாரண பொண்ணு இல்லை. அவளை நீ கண்ணெதிரில் பாதுகாப்பா வச்சு, நடவடிக்கைகளை கவனிக்கறது நல்லதுன்னு அறிவுரை சொல்றாங்க.

எப்போதும் நிலாவுக்கு

எப்போதும் நிலாவுக்கு

அன்றிலிருந்து நிலாவுக்கு நீலாம்பரி ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறாங்க. தங்கை வெண்மதி, மகன் சஞ்சய் இவங்களுக்கு கூட கம்பெனியில் பொறுப்பு கொடுக்காத நீலாம்பரி, நிலாவுக்கு இப்போதைக்கு தனக்கு அடுத்த பொறுப்பை கொடுக்கறாங்க. அவங்க இந்த எல்லா திட்டத்தையும் செயல்படுத்தி, நிலாவின் பேரிலிருக்கும் சொத்துக்களை தனது பெயருக்கு மாத்திக்க பிளான் போடறாங்க.

அம்மா இருக்காங்க

அம்மா இருக்காங்க

எப்படியாவது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு, சொத்துக்களை மட்டுமில்லை, அப்பா உயிரோடு இருக்காங்களா தெரியலை.உயிரோடு இருக்கும் அம்மாவை கண்டு பிடிக்கணும். அதுக்கு இந்த மாதிரி எல்லாம் நீலாம்பரி சொல்வதை கேட்டே ஆகணும்னு முடிவுக்கு வந்துடறா நிலா. சஞ்சய், வெண்மதி, நிலாவின் வளர்ப்பு அப்பா அதாவது தாய் மாமா பொண்ணு ஸ்வேதா எல்லாரும் பொறாமைப்படும்படி நீலாம்பரி குரூப் ஆஃப் கம்பெனியில் நல்ல பொறுப்பில் இணைஞ்சுடறா.

கதையில் சுவாரஸ்யம்

கதையில் சுவாரஸ்யம்

கதையின் இனிதான் சுவாரஸ்யம் நிகழப் போகிறது. கூடவே வீட்டில் இருக்கும் அம்மாவை தனது அம்மாதான் என்று நிலா எப்போது கண்டு பிடிப்பாள்? அசோக்கின் மனைவி அஞ்சலிக்கு வைத்தியம் பார்ப்பது தனது புருஷன் ஸ்ரீதர்தான் என்று நிலாவின் அம்மா எப்போது அவரை பார்ப்பார்கள்? நிலா எந்த தந்திரங்களை பயன்படுத்தி அப்பாவின் தொழிலை உரிமையாக்கிக் கொள்வாள் என்கிற எதிர்பார்ப்பு சீரியல் ஆர்வலர்களுக்கு உருவாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X