ஜில்லாவுக்கே ராஜாவா இருந்தாலும் பொண்டாட்டிக்கு புருஷன்தான் சார்!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில், ரோஜா இடத்தில் அன்ன பூரணி அம்மாவின் பேத்தியா அணு ஏமாத்திட்டு உட்கார்ந்து இருக்கா.
அதோடு தான்தான் லாயர் டைகர் மாணிக்கத்தின் பொண்ணுன்னு சொல்லி அவரையும் ஏமாத்தி வச்சு இருக்கா.
இவளை எப்போது பையா கணேஷ் கொலை வழக்கில் ஆதாரத்தோடு கைது செய்யலாம்னு அர்ஜூன் காத்து இருக்கான்.

கதவைத் தட்டிட்டு
ரோஜா புடவை கட்டிக்கொண்டு இருக்க, அர்ஜுன் சடாரென்று உள்ளே போயிடறான்.என்ன சார் நீங்க.. கொஞ்சம் கூட டீசன்ஸி இல்லாம...கதவைத் தட்டிட்டு வர மாட்டீங்களான்னு சிணுங்கறா. அதெல்லாம் விடு ரோஜா சாந்த மூர்த்தி ஐயா சொன்ன மாதிரி இந்த படத்துக்கு பின்னாடி எழுத்து இருந்துச்சு. ஆனா,அனுதான் வேணும்னே பாக்கெட் தண்ணியைத் தட்டிவிட்டு எழுத்து அழியற மாதிரி செய்துட்டான்னு சொல்றான்.

சார் விடுங்க
விடுங்க சார்...சாந்த மூர்த்தி ஐயாதான் அந்த டிரஸ் அணுவோடதுதான்னு சொல்லிட்டாரே..அப்புறம் என்ன சார் சந்தேகம்னு சொல்லிட்டு, சார் இந்த புடவை மடிப்பை சரி பண்ணி விடுங்க சார்னு சொல்றா. என்ன சொன்னேநான் உன் புடவை மடிப்பை சரி செய்யறதான்னு அர்ஜுன் கேட்கறான்.

ராஜா எனக்கு
சார் இந்த ஜில்லாவுக்கே ராஜாவா இருந்தாலும் பொண்டாட்டிக்கு புருஷன்தானே சார்.இதை எல்லாம் எல்லா புருஷன்களும் செய்யறதுதான் சார். கோயிலுக்கு அத்தை கூப்பிட்டாங்க சார்..சீக்கிரம் சரி பண்ணி விடுங்கன்னு சொல்றா. அது சரிதான்னு சொல்லிட்டு கீழே உட்கார்ந்து சரி செய்து விடறான்.

நல்லாத்தான் ரோஜா
இது கூட நல்லாத்தான் ரோஜா இருக்கு...ஆனா,இது வெளிய தெரியாம பார்த்துக்கணும்னு சொல்றான் அர்ஜுன். போதும் சார் விடுங்க... இன்னிக்கு நான் ரொம்ப நல்லாவே புடவை கட்டி இருக்கேன். வாங்க செல்ஃபி எடுத்துக்கலாம்னு கூப்பிடறா. சார் சிரிங்க சார்...அணு கூட ஈன்னு இளிச்சுகிட்டு எடுத்தீங்க... நான் உங்க பொண்டாட்டி சார்...நெருங்கி நில்லுங்கன்னு அர்ஜுனை அசத்தறா ரோஜா.


Click it and Unblock the Notifications











