twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை கிண்டல் செய்தால் சந்தோசப்படுவேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்

    By Mayura Akilan
    |

    என்னை கிண்டல் பண்ணா நான் வருத்தப்பட மாட்டேன். சந்தோசம்தான் படுவேன் என்று கூறியுள்ளார் இயக்குநர், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

    சினிமாவில் பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தவர் லட்சுமிராமகிருஷ்ணன். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.

    அதோடு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சினைகளுக்கு கட்டப் பஞ்சாயத்தும் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

    சொல்வதெல்லாம் பொய்

    சொல்வதெல்லாம் பொய்

    இந்தநிலையில், விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது என்ற நிகழ்ச்சியில், அவரை கலாய்ப்பது போல், சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை என்றொரு ஜாலியான நிகழ்ச்சியை கடந்த சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பினார்கள்.

    செம கிண்டல்

    செம கிண்டல்

    நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி ராமகிருஷ்ணன் என்ற பெயர் கொண்டவர், லட்சுமி ராமகிருஷ்ணனைப்போல பேசி நடித்து கலாய்த்தார்.

    இப்படி பண்றீங்களேம்மா…

    இப்படி பண்றீங்களேம்மா…

    "என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..", "போலீஸைக் கூப்பிடுவேன்.." இது லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் டயலாக். இது இணையத்தில் பலரும் கிண்டல் செய்யும் அளவிற்கு, வசனங்கள் பிரபலம்.

    செம ஹிட்

    செம ஹிட்

    யு டியூப்பில் பதிவேறிய அந்நிகழ்ச்சியினை இதுவரை பார்த்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தினைத் தொடவிருக்கிறது. முதன் முறையாக தனது நிகழ்ச்சியினை கிண்டல் செய்ததற்கு ‘அது இது எது' நிகழ்ச்சிலேயே பதில் சொன்னால் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டேன்

    ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டேன்

    அந்நிகழ்ச்சியை செய்தவர்கள் என்னை பிரபலமாக்கிவிட்டார்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா அப்படினு நானே சொல்லி என்னை கலாய்க்க போறாங்கனு நினைக்கிறேன். இப்படி பண்ணீங்கன்னா போலீஸை கூப்பிடுவேன் என சொன்னதை பிடித்துக் கொண்டார்கள்.

    நானே என்ஜாய் செய்தேன்

    நானே என்ஜாய் செய்தேன்

    'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியே ஒரு பிரபல நிகழ்ச்சி. உங்களோட கிண்டலுக்குப் பிறகு இன்னும் பிரபலமாகிவிட்டது.நான் நிறைய நிகழ்ச்சிகளுக்கு போகும் போது, நிறைய புகைப்படங்கள் எடுக்கிறார்கள். நிறைய பேர் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று என்னைப் பார்த்து கேட்கிறார்கள்.

    கிண்டல் பண்றாங்களோ

    கிண்டல் பண்றாங்களோ

    நான் என்ன நினைக்கிறேன் என்றால், நமது திரையுலகில் ஒரு புதிய காமெடியன் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை கலாய்க்கிறாங்க என்று தெரியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருப்பார். அப்படி என்னையும் கிண்டல் செய்கிறார்களோ என சந்தேகம் வந்துவிட்டது. நானே அந்த கிண்டல் வீடியோவை சந்தோஷத்தோடு பார்த்தேன்.

    நான் வருத்தப்பட மாட்டேன்

    நான் வருத்தப்பட மாட்டேன்

    என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். ஆனால் நிகழ்ச்சியோட கன்டென்ட் அதில் வருகிற மக்கள் போன்றவற்றை கிண்டலடிக்கக் கூடாது. அந்நிகழ்ச்சிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது, டி.ஆர்.பி ரேட்டிங் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியை நான் சிறப்பாக செய்து வருகிறேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம். நான் வருத்தப்பட மாட்டேன் என்று கூறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    English summary
    Actress and Director Lakshmi Ramakrishnan has said that she will not get angered if anybody teases her, instead she will take it jovially.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X