இலக்கியா சீரியல் நடிகைக்கு வளைகாப்பு.. இணையத்தில் டிரெண்டாகும் போட்டோஸ்!
சென்னை: சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் தான் இலக்கியா. இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷ்மா நாயர். இவர் அண்மையில் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது அவருக்கு சிறப்பாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இலக்கியா தொடர் ஒளிபரப்பானது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில், சாம்பவி குருமூர்த்தி, நந்தா லோகநாதன், காயத்ரி சாஸ்திரி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த தொடரில் பெண்கள் போராட்டம், சமூக அழுத்தம் போன்ற கதைக்களத்துடன் கதை நகர்ந்து கொண்டு இருந்தது.

சீரியல் நடிகை சுஷ்மா நாயர்: இலக்கியா சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் இருந்த நிலையில், 985 எபிசோடுகளுடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான இந்த தொடர் அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் சுஷ்மா நாயர். இவர் நாயகி தொடரின் அனன்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த தொடர் தமிழும் சரஸ்வதியும், பட்ஜெட் குடும்பம் என அடுத்தடுத்து சீரியல்கள் நடித்துள்ளார்.

வளைகாப்பு: நடிகை சுஷ்மா நாயர் சொந்தமாக பேஷன் டிசைனிங் தொழிலையும் நடத்தி வரும், அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருந்தார். இதையடுத்து, தற்போது அவருக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அந்த போட்டோ மற்றும் வீடியோ இலக்கியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுஷ்மா நாயர், 'பிரார்த்தனைகள், புன்னகைகள் மற்றும் ஆசீர்வாதங்களால் என் குழந்தையை சுமப்பது என்னால் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்று. என்னைச் சுற்றியுள்ள அனைவராலும் மென்மையாக உணர்ந்தேன். தாய்மையின் ஒரு அன்பான அரவணைப்பு உணர்கிறேன். இந்த நாளில் எதுவும் தற்செயலாக நடக்கவில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாளை அழகாக்கினார்கள் என பதிவிட்டுள்ளார். இந்த வளைகாப்பில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அவருக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சுஷ்மா நாயர், லிஜோ ஜான் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











