கணவர்கள் லிவர் மாதிரியாம்... இளவரசி டிவி சீரியல் வசனம்தாங்க....
டிவி சீரியல்கள் என்றாலே டென்ஷனாகி ரிமோட்டை தூக்கிப் போட்டு உடைத்து சாந்தமாகும் ஆத்மாக்கள் நாட்டில் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் சில டிவி சீரியல்களைப் பார்த்தால் எப்படிய்யா.... இப்படி என்று ஆச்சரியம்தான் வருகிறது.
அந்த அளவுக்கு வசனங்கள் செம கலக்கலாக இருக்கின்றன. ரூம் போட்டு உட்கார்ந்து எழுதுவார்களா அல்லது எழுதி விட்டு ரூம் போட்டு ஷேப் செய்வார்களா என்று தெரியவில்லை.
மத்தியானம் சாப்பிடலாமேன்னு டைனிங் டேபிளில் உட்கார்ந்தபோது காதைக் கிழித்தபடி விர்ரென்று பறந்தது அந்த வசனம்... அது இளவரசி சீரியல் வசனம்...

குடும்பப் பாங்கான இளவரசி
குடும்பப் பாங்கான சீரியல் இளவரசி.. ஆனாலும் வழக்கம்போல அவர் மீது இவர் காதல்... இவர் மீது அவர் காதல்.. எவர் மீது எவருக்குக் காதல் கதையாகி விட்டது இந்த சீரியல் இப்போது. இன்றைய எபிசோடில் வசனங்கள்தான் ஹைலைட்

அக்கா இளவரசி.. தங்கச்சி நீலா
இன்றைய எபிசோடில் அக்கா இளவரசியும், தங்கச்சி நீலாவும் புழக்கடையில் உட்கார்ந்து குத்துவிளக்கை துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் வசனங்கள் பளிச்...!
தன்னுடைய கணவரை ஒட்டிக் கொண்டே இருக்கும் மகாவைப் பற்றி சொல்கிறாள் இளவரசி. மகா அப்பாவியா என்று கேட்க அதற்கு தங்கை நீலா சொல்கிறாள்,அப்பாவி என்று ஒட்ட விடாதே அப்புறம் அடப்பாவி என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிடும் என்று கூறுகிறாள்.

புருஷங்க 'லிவர்' மாதிரி...
அப்போது தனது கணவர் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் இளவரசி. அப்போது அங்கு வருகிறார் இளவரசியின் கணவர். சாம்பிராணியை கம்மியா போடு நீலா என்று கூறவே, நீலா, தனது மாமாவைப் பார்த்தபடி சொல்கிறார்.. அக்கா, இந்த புருஷங்க எல்லாம் லிவர் மாதிரி.. போச்சுன்னா ஒன்னும் செய்ய முடியாது...

பொண்டாட்டிங்க 'கிட்னி' மாதிரி...
பொண்டாட்டிங்க எல்லாம் இந்த ஆண்களுக்கு கிட்னி மாதிரி. ஒன்னு கெட்டுப் போச்சுன்னா.. இன்னொன்ன வச்சு மேனேஜ் பண்ணிடுவாங்க...
நீங்களே சொல்லுங்க.. இப்படியெல்லாம் எங்கயாச்சும் வசனம் கேட்ருக்கீங்களா.... ? அதுவும் மத்தியானம் சாப்பாட்டு நேரத்தில இதுமாதிரியெல்லாம் பார்த்தா அப்புறம் சோறு உள்ள இறங்குமா என்ன?


Click it and Unblock the Notifications











