ஆண்டாள் அழகர் சீரியரில் இளையாராஜா பாடல்கள்
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு... என்று தொடங்கி பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்பது வரை மணக்க மணக்க இளையராஜாவின் பாடல்கள் விஜய் டிவி சீரியலில் வர உள்ளது.
விஜய் டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ஆண்டாள் அழகர். இது மண்மனக்கும் கிராமிய தொடர்.
காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாட்டு கிராமிய கலாச்சாரத்தோடு சொல்லப்படுகிற காதல், குடும்ப சென்டிமென்ட் கதையை கதிரவன் இயக்குகிறார்

அம்மன் கோவில் கிழக்காலே..
இந்த தொடரின் புரமோஷன் பாடலாக இளையராஜாவின் "அம்மன் கோவில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலோ..." என்ற பாடல் பயன்படுத்ததப்படுகிறது.

மண் மணக்கும் தொடர்
"இந்த தொடர் பாரதிராஜா சார் பாணியில் சொல்லப்படும் அழகான கிராமத்து காதல் கதை. மண்மனம் மாறாத கிராமத்து கலாச்சாரத்தின் பதிவாக இருக்கும்" என்றார் இயக்குனர் கதிரவன்.

மாங்குயிலே பூங்குயிலே
அதேபோல படத்தின் முக்கியமான காட்சிகளில் புகழ்பெற்ற இளையராஜாவின் பின்னணி இசையை பயன்படுத்துகிறார்கள் கரகாட்டக்காரனின் மாங்குயிலே பூங்குயிலே பாடல் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளது.

அடி ஆத்தாடி….
கடலோரக் கவிதைகள் படத்தில் வரும் பிரபல பாடலான அடி ஆத்தாடி இளம் மனசொன்னு இறக்கை கட்டி பறக்குது... படலும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் ஸ்டாலின் ரம்யா ஜோடிக்கு வருகிறது.

கொடியிலே மல்லிகைப்பூ
அதோடு கல்யாணியின் காதல் காட்சிக்கு கொடியிலே மல்லிகைப்பூ பாடல் அழகு சேர்க்கிறது.

பிரபல நட்சத்திரங்கள்
இதொடரில் விஜய் டிவியின் பிரபல நட்சத்திரங்களான கல்யாணி, ஸ்டாலின், பாலா, ரம்யா, நட்ராஜ், சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று முதல் இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது ஆண்டாள் அழகர் தொடர்.

ரசிகர்களின் வரவேற்பு
விஜய் டிவியின் தொடர்களில் நேயர்களின் அபிமான தொடர்களாக "கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, பிரிவோம் சந்திப்போம்," போன்ற தொடர்கள் நேயர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில் ‘ஆண்டாள் அழகர்' தொடரின் கதையும் களமும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் கதிரவன்.


Click it and Unblock the Notifications











