மகாநதி சீரியலில் அறிமுகமாகும் இளையராஜாவின் மருமகள்.. என்ன கேரக்டர் தெரியுமா? குவியும் வாழ்த்து

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கெஸ்ட் ரோலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான நடிகை ஹாசினி அறிமுகமாகி இருக்கிறார்.

இந்த சீரியலில் காவிரி மற்றும் நிவின் காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்குமா? இல்லையா? என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

 Ilayarajas daughter-in-law Actress Haasini to debut in Mahanadi serial

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது. அதாவது தற்போது 100 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் எதிர்ப்பாராத டுவிஸ்ட் நிகழப் போகிறது.

இளையராஜாவின் மருமகள் உடைத்த ரகசியம்..விக்ரம் பிரபுவுக்கு ஜோடியா நடிக்க சொல்லி ஏமாத்த பார்த்தாங்க..!

இந்த சீரியலுக்கான பிரமோஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சீரியலின் கதைக்களமும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதுபோல பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அப்பா இறந்த நான்கு பெண்களின் கதையை மையமாகக் கொண்டு இந்த கதை நகர்ந்து வருகிறது.

அதில் கங்காவின் திருமணம் பல போராட்டங்களுக்குப் பிறகு குமரனுடன் நடைபெற்றது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் காவிரியும் நிவினும் காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் வீட்டிற்கு தெரிய ஆரம்பித்ததும் நிவினின் தந்தை இன்னொரு பெண்ணோடு நிவினுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்து வைத்திருக்கிறார்.

 Ilayarajas daughter-in-law Actress Haasini to debut in Mahanadi serial

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் காவிரியிடம் நிவின் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா? என்று கேட்க அதற்கு பதில் சொல்லாமல் காவிரி முறைத்தபடி இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடக்குமா? இல்லையா? என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சீரியலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகளும் சீரியல் நடிகையுமான ஹாசினி போலீஸ் உடையில் அறிமுகமாகிறார்.

அதில் ஹாசினியுடன் காவேரி மற்றும் நிவின் இருக்கின்றனர். இதனால் காவேரி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து திருமணத்தை நிறுத்தி வைக்க போகிறாரா? அல்லது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கேட்டு போகப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதுபோல சீரியல் நடிகை ஹாசினி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் மார்க்கண்டேயனின் மகளாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் இனி எந்த மாதிரி கதை வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

உயிரை கையில் புடிச்சிட்டு தப்பிச்சு வந்துட்டேன்.. கண்ணீரோடு மனம் திறந்த "இளையராஜா"வின் மருமகள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X