Minnale Serial: பயபுள்ள... வீட்டில் நிம்மதியா இருக்க விடாது போலிருக்கே!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாதிக்கு மேற்பட்ட சீரியல்களில் இவளை கொலை செய்ய, அவனை கொலை செய்யத் திட்டம் தீட்டும் கதைதான் அதிகம். பகல் முழுக்க இப்படி கிரைம் ஸ்டோரின்னா..கன்றாவி ராத்திரி நேரத்திலும் அப்படித்தாங்க இருக்கு. கொலைகாரிய வீட்டில் வச்சுக்கிட்டு எப்படித்தான்டா நிம்மதியா இருக்க முடியும்?
ரோஜா சீரியலில் ரோஜாவை கொலை செய்ய அணு திட்டம் போடுவதும். சாட்சியும் அணுவும் சேர்ந்து பூஜாவை கொலை செய்யத் திட்டம் போடுவதும் என்று போகிறது. ராசாத்தி சீரியலில் புருஷனையே சிந்தாமணி கொலை செய்யத் திட்டம் போடுவதும்..
மாமனாரை கொலை செய்துவிட்டு அதை மூடி மறைச்சு பாதுகாப்பாத்தும்னு முடியலை. ரன் சீரியலில் கேட்கவே வேணாம்...போதை மருந்து கடத்தறதும்...திவ்யா அப்பா நிழல்கள் ரவியை அதாவது ஆர்.கேவை பொண்டாட்டியோடு சேர்த்து லாரி மோதி விபத்துன்னு அனுப்பி வச்சுட்டாங்க.

மின்னலே சீரியல்
சன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் மின்னலே சீரியல், ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனத்தின் தயாரிப்பு சீரியல். இந்த சீரியலில் தினம் தினம் அவளை கொலை செய்யத் திட்டமிடுவதும்,. இவளை கொலை செய்யத் திட்டமிடுவதும் என்று என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு கேட்கும் அளவுக்கு தாங்க முடியலை. எல்லாமே இந்த பொண்ணுங்க செய்யற சேட்டைதான்..

வெண்பொங்கலில் விஷம்
முழுகாம இருக்கும் ஷாலினி அம்மா வீட்டுக்கு வர்றா. அவளுக்கு ஆசையா என் கையால நானே ஊட்டி விடறேன்னு சாப்பிட சொல்றாங்க அம்மா. அதுக்குள்ளே ஷாலினியின் அண்ணி போயி, சாம்பாரில் விஷம் கலந்து வச்சுட்டு வந்துடறா. அம்மாவும் ஆசை ஆசையா பொங்கலை எடுத்துட்டு வந்து மகளுக்கு ஊட்டி விடப் போறாங்க.

ஷாலினிக்கு ஒன்னும் ஆகலை
விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டும் ஷாலினிக்கு ஒன்னும் ஆகலை.. என்னடான்னு அண்ணி யோசிச்சு நிற்க, சாப்பிட்ட ஷாலினி அம்மாவுடன் மாடிக்குப் போயிட்டா. புருஷன் வந்து என்னடி.. விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டும் ஷாலினிக்கு ஒன்னும் ஆகலைன்னு பார்க்கறியா என்றுபுருஷன் அருகில் வந்து கேட்க. விக்கித்து நிற்கிறாள்.

சாம்பாரை மாத்திட்டேன்
நீ விஷம் கலந்ததை நான் பார்த்தேண்டி... நீ வெளியில் போன உடனே அந்த சாம்பாரை ஊத்திட்டு, வேற சாம்பார் ஊத்தி வச்சுட்டேண்டின்னு என்னவோ சாமர்த்தியம் செய்துட்ட மாதிரி சொல்றான். இப்படி ஒரு பொண்டாட்டியை கட்டிக்கிட்டு எப்படிடா வீட்டில் நிம்மதியா இருக்கேன்னு கேட்கணும் போல இருக்கு சீரியல் பார்ப்பவர்களுக்கு. ஆமா.. எப்படி இப்படி ஒரு பொண்டாட்டியை, மருமகளை வீட்டுல வச்சுக்கிட்டு நித்தம் நித்தம் பொழப்பை ஓட்டறது?


Click it and Unblock the Notifications











