குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் யாரு தெரியுமா?
லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார், இளைய சூப்பர் ஸ்டார் என சூப்பர் ஸ்டார் பட்டம் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நடிகர்கள், பவர் ஸ்டார், சோலார் ஸ்டார், வின் ஸ்டார், டாப் ஸ்டார், எவர்கிரீன் ஸ்டார் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் போட்டுக்கொண்டு வலம் வருகின்றனர்
மிர்ச்சி சிவா ‘தமிழ் படம்' நடித்த போது அதில் கிண்டலுக்காக வைக்கப்பட்ட அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நிஜத்திலும் சொந்தமாக்கிக் கொண்டார். அவர் வசனத்தில் வெளிவரும் ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் டிரைய்லரில் அவரை அகில உலக சூப்பர் ஸ்டார் என்றுதான் போடுகிறார்கள்.
இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பலவித பஞ்சாயத்துகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் என டைட்டிலில் பட்டப் பெயரை போடும்படி நடிகர் இமான் அண்ணாச்சி கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிவியில் அண்ணாச்சி
கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்ற இமான் அண்ணாச்சி, மக்கள் டிவியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடத்தினார்.

குட்டி சுட்டீஸ்
ஆதித்யா சேனலில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நடத்தி பிரபலமான அண்ணாச்சி, அதை சன் டிவியின் ஞாயிறு ப்ரைம் டைமிற்கு மாற்றும் அளவிற்கு பிரபலப்படுத்தினார். அதே சன்டிவியில் மாலை நேரத்தில் இவர் நடத்தும் குட்டி சுட்டீஸ் குழந்தைகளின் நிகழ்ச்சிக்கு ஏகபோக வரவேற்பு.

சினிமாவில் அண்ணாச்சி
சினிமாவுக்குள் சின்னச் சின்ன ரோல்கள் செய்த அண்ணாச்சி இப்போது மெயின் காமெடியனாக நடித்து வருகிறார். அவர் பேசுகின்ற திருநவேலி ஸ்லாங் அவருக்கு மிகப் பெரிய பலமாக இருக்க.. நிறைய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு புக்காகி வருகிறது.

டைட்டிலில் பெயர்
இதனால் டிவி நிகழ்ச்சிக்குக்கூட போக முடியாத அளவுக்கு பிஸியாகி விடவே, இப்போது அடுத்தக் கட்ட வளர்ச்சியாக தன்னுடைய பெயரை டைட்டிலில் போடும்போது தனக்கு புதிதாக பட்டம் ஒன்றை போடுமாறு கூறி வருகிறாராம்.

குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்
‘பட்டைய கெளப்பணும் பாண்டியா', ‘புதியதோர் உலகம் செய்வோம்' ஆகிய படங்களில் இவரது ஆசை நிறைவேறியிருக்கிறது "குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்" என்று டைட்டிலில் பெயர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடைமொழி ஆசை
வடிவேலுக்கு வைகை புயல் அடைமொழி போட்டது போல இமான் அண்ணாச்சிக்கு இனி இனிமேல் அடுத்தடுத்து வரும் படங்களில் இப்படித்தான் வரும்போலவும் தெரிகிறது.

தக்கவைத்துக்கொள்வாரா அண்ணாச்சி
‘சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கு ஆசைப்படலாம்தான். ஆனால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. திரையுலகிலும் நீடித்து இருக்க வேண்டும்..!.இமான் அண்ணாச்சிக்கு, இது இரண்டும் கிடைக்க வாழ்த்துகிறோம்..!


Click it and Unblock the Notifications











