குட்டிச் சுட்டீஸ்: அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்கும் அண்ணாச்சி!

By Mayura Akilan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் குட்டீஸ்களிடம் இப்போதெல்லாம் அறிவுப்பூர்வமாக கேள்விகளை கேட்டு அசத்தி வருகிறார் இமான் அண்ணாச்சி.

ஞாயிறு மாலை 5 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி குட்டிச் சுட்டி. இதில் தொடக்கத்தில் கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும் மழலைகளின் பேச்சு, அண்ணாச்சியை அவர்கள் மடக்கும் விதமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியில் அண்ணாச்சி கொஞ்சம் அறிவுப்பூர்வமாகவே கேள்விகள் கேட்கிறார். குழந்தைகளும், புத்திசாலித்தனமாக பதில் சொல்லுகின்றனர்.

குடும்ப சண்டையைப் பற்றியும், உள் விவகாரங்களைப் பற்றியும் அதிகம் கேட்பதில்லை மாறாக குழந்தைகளின் எதிர்காலம், அவர்கள் என்னவாகப் போகிறார்கள், என்பதைப் பற்றி கேட்டு அவர்களிடம் இருந்து பதிலை வாங்குகிறார்.

செவ்வாய் போகும் சிறுவன்

செவ்வாய் போகும் சிறுவன்

கடந்த வாரத்தில் ஒரு சிறுவன் செவ்வாய் கிரகத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்யப் போவதாக கூறினான். அண்ணாச்சியின் கேள்விக்கு எல்லாம் ஓரளவிற்கு தெளிவான பதிலையே சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.

சின்னத்திரை நட்சத்திரங்கள்

சின்னத்திரை நட்சத்திரங்கள்

மே 1ம் தேதி சின்னத்திரை நட்சத்திரங்களின் வீட்டுக்குழந்தைகள் பங்கேற்ற சிறப்பு குட்டிச் சுட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் சோனியா, பூஜா, சூசன், ரிந்தியா ஆகிய சின்னத்திரை நட்சத்திரங்களின் வீட்டுக்குழந்தைகள் பங்கேற்றனர்.

சரியான ஜோடி

சரியான ஜோடி

சின்னத்திரை நட்சத்திரங்கள் சோனியா, போஸ் வெங்கட் தம்பதிகளின் குட்டிப்பெண்ணிற்கு நடிகை ஆகவேண்டும் என்று ஆசையாம். குட்டிச்சாத்தான் படத்தில் அம்மா நடித்தார் என்று கூறிய குழந்தை, அப்பா வில்லனாக நடிப்பதுதான் பிடிக்கும் என்று கூறியது. அம்மாவிற்கு சரியான ஜோடி சூர்யாவா, போஸ் வெங்கட் ஆ என்று கேட்டதற்கு போஸ் வெங்கட் என்று கூறி அசத்தியது அந்த குழந்தை

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

சோனியா - போஸ் வெங்கட் தம்பதியரின் மகனுக்கு நடிக்கவேண்டும் என்று ஆசை எல்லாம் இல்லை என்று கூறிவிட்டான். கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்று கூறிய சிறுவனுக்கு நடிப்பது அவசியமில்லை என்றான்.

ரொம்ப நல்லவங்க

ரொம்ப நல்லவங்க

ரிந்தியாவின் அக்காள் மகன், தன்னுடைய சித்தி நடிப்பதாக கூறினான். திருமதி செல்வத்தில் எங்க சித்தி ரொம்ப நல்லவங்களாக நடிச்சிருக்காங்க என்றான்.

மேக் அப் போட்டிருக்காங்க

மேக் அப் போட்டிருக்காங்க

சூசனின் அக்காள் மகள் தன்னுடைய சித்தி தென்றல் தொடரில் நடித்திருப்பதாக கூறியது.

பூஜாவின் குழந்தை

பூஜாவின் குழந்தை

வாய் ஓயாமல் பேசும் குட்டி பூஜாவின் குழந்தையும் வாய் அதிகமாகவே பேசியது. அப்பா இந்தியா இருக்காங்க, நாங்க சென்னையில இருக்கோம் என்று கூறி அண்ணாச்சியை அதிர வைத்தது. எங்க வீடு குண்டா இருக்கும். எங்க அம்மாவும் குண்டா இருப்பாங்க என்றது அந்த குட்டீஸ்.

பெற்றோர்களும் உழைப்பாளர்கள்

பெற்றோர்களும் உழைப்பாளர்கள்

மே 1ம் தேதி ஏன் சிறப்பு குட்டிச் சுட்டி என்று கேள்வி கேட்ட அண்ணாச்சி, ஒவ்வொரு பெற்றோரும் உழைப்பாளர்கள்தான் எனவேதான் உழைப்பாளர் தினத்தில் சின்னத்திரை நட்சத்திரங்களின் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவதாக கூறினார். ஆனால் அண்ணாச்சியின் உடைதான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. அடுத்த வாரம் உடையில கொஞ்சம் கவனம் செலுத்துங்க அண்ணாச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X