அம்மா குறித்த உண்மையை கண்டுபிடித்த ஹேமா.. மன்னிப்பு கேட்ட பாரதி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாரதி கண்ணம்மா இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த தொடரில் தற்போது ஒருபுறம் வெண்பாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார் பாரதி.

மறுபுறம் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறார். டெஸ்ட் ரிசல்ட் வந்தால் கதை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா தொடர்

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக உள்ள பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்களும் இதையே உணர்த்துகின்றன. தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மா தன்னை காப்பாற்றியதில் இருந்து பாரதியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பலன்

சந்தேகத்தின் பலன்

பாரதி மற்றும் கண்ணம்மா இடையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய மகனின் குழந்தையையே அனாதை குழந்தை என்று சொல்லி வீட்டிற்குள் வளர்த்து வருகிறார் பாரதியின் அம்மா சவுந்தர்யா.

 பாரதியின் சாப்ட் கார்னர்

பாரதியின் சாப்ட் கார்னர்

இதனிடையே பாரதியின் மருத்துவமனையில் தீவிரவாதிகள் புகுந்த நிலையில், பாரதியை அவர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார் கண்ணம்மா.இதையடுத்து அவர்மீது பாரதிக்கு ஒரு சாப்ட் கார்னர் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவர் கூறுவது போல ஹேமா மற்றும் லட்சுமி தன்னுடைய குழந்தைகள்தானோ என்ற சந்தேகமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் பாரதி

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் பாரதி

இதையடுத்து டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க அவர் முற்படுகிறார். இதனிடையே தன்னுடைய தந்தைக்கு கேன்சர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஒரு பக்கம் தன்னை திருமணம் செய்யச் சொல்லும் வெண்பாவிற்கும் ஓகே சொல்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் மூலம் கிடைக்கும் ரிசல்ட்டின் அடிப்படையில் வெண்பாவை திருமணம் செய்வதா அல்லது கண்ணம்மாவுடன் இணைவதா என்பது குறித்து முடிவெடுக்க அவர் திட்டமிடுகிறார்.

உண்மையை அறிந்த ஹேமா

உண்மையை அறிந்த ஹேமா

இதனிடையே, பாரதி தன்னுடைய அம்மாவாக அறிமுகம் செய்த அவரது முன்னாள் காதலி ஹேமா, தன்னுடைய அம்மா இல்லை என்பதை அறிந்து கொள்கிறாள் ஹேமா. இதையொட்டி தன்னுடைய அப்பா ஏன் அவ்வாறு சொன்னார் என கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து ஹேமா அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வரப்பட்டவர் என்ற தான் நினைத்துக் கொண்டிப்பதை வெளிப்படுத்துகிறார்.

மனமுடையும் ஹேமா

மனமுடையும் ஹேமா

இதனால் ஹேமா மனமுடைகிறாள். தான் அப்பாவாக நினைத்துக் கொண்டிருந்த பாரதி, தன்னுடைய வளர்ப்பு அப்பா என்பதை உணர்ந்து அவள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள். இவ்வாறாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. தொடர்ந்து டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் சீரியலை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X