பிக்பாஸ் 8: அர்ணவ் -அன்ஷிதாவுக்கு போட்டி.. வைல்ட் கார்டில் களமிறங்கும் திவ்யா?.. இனிமேல்தான் ஆட்டமே!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் வாரயிறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களிடமும் சாட்டையை சுழற்றியதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக தயாரிப்பாளர் ரவீந்தர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த சீசனில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் தங்களது ஆட்டத்தை ஆடி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியை கூடுதல் சுவாரஸ்யமாக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அடுத்தடுத்து செயல்பட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் தமிழ் 8 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 10 நாட்களை கடந்து ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில், துவக்க விழா நிகழ்ச்சியிலேயே ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹோஸ்ட்டாக மாறியுள்ளார் விஜய் சேதுபதி. கடந்த 6ம் தேதி இந்த நிகழ்ச்சி துவங்கிய நிலையில் 18 போட்டியாளர்களையும் அவர்களின் நிறை குறைகளுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருந்தார். இதையடுத்து கடந்த வாரத்தில் வாரயிறுதி எபிசோடில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தன்னுடைய சாட்டையை சுழற்றியதை பார்க்க முடிந்தது.
ஹோஸ்ட் விஜய் சேதுபதி: இந்த வாரயிறுதி எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியை ஏற்றியுள்ளது. ஆயினும் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அடுத்தடுத்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அர்ணவ் முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுகிறார். அடுத்தடுதது சிண்டு முடிக்கும் வேலைகளில் அவர் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. இவருடன் பெண்கள் டீமில் அன்ஷிதாவும் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து செல்லம்மா சீரியலில் லீட் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், அன்ஷிதாவுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாகவே தன்னை அர்ணவ் பிரிந்தததாக அவரது முன்னாள் மனைவி திவ்யா குற்றம் சாட்டியிருந்தார்.
வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ணவின் முன்னாள் மனைவி: இந்நிலையில் இவர்கள் இருவரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாகி இருந்தது. இந்நிலையில் தற்போது அர்ணவின் முன்னாள் மனைவி திவ்யாவை பிக்பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் சுற்றில் களமிறக்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அர்ணவ் மற்றும் திவ்யா இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் திவ்யா கர்ப்பமாக இருந்தபோது அவரை விட்டு அர்ணவ் பிரிந்தார். திவ்யாவிற்கு குழந்தை பிறந்தபோதும் அர்ணவ் நேரில் சென்று பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அர்ணவ் -அன்ஷிதா -திவ்யா: இந்நிலையில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக திவ்யா இணைந்தால் நிகழ்ச்சி ரணகளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொண்ட நிலையில் எதிரில் அர்ணவ் கிடைத்தால், திவ்யாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும், அன்ஷிதா எப்படி ரியாக்ட் செய்வார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











