Ugadi: யுகாதி வாழ்த்துக்கள் மக்களே.. டிவியில என்ஜாய் பண்றதுக்கு என்னென்ன படங்கள் இருக்கு தெரியுமா!
அறுவடை பருவத்தின் துவக்கமாக இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே இன்றைய தினம் உகாதி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில மக்கள் இன்றைய தினம் உகாதி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளன. திரையரங்குகளிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றிகரமாக ஓடி வரும் சூழலில் அதையும் பார்க்க தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் தயாராகி வருகின்றனர். சுற்றுலா தளங்களிலும் இன்றைய தினம் கொண்டாட்டங்களை பார்க்க முடிந்தது. வீடுகளிலும் தங்களது சம்பிரதாய முறைப்படி மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். அறுவடை பருவத்தின் தொடக்கத்தில் இந்திய அளவில் மக்கள் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழில் வரும் பதினான்காம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தமிழ் புத்தாண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஆங்கில புத்தாண்டை வெளியில் சென்று கொண்டாடும் தமிழ் மக்கள், தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறைப்படி வீடுகளில் படையல் வைத்து கொண்டாடும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
உகாதி பண்டிகை: இந்நிலையில் இன்றைய தினம் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் உகாதி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திரைத்துறை பிரபலங்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் விடுமுறையில் இருக்கும் மக்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்க தொலைக்காட்சி சேனல்கள், நான் -நீ என்று போட்டியிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளையும் சிறப்பு திரைப்படங்களையும் ஒளிபரப்பி வருகின்றன.
டிவியில் சிறப்பு திரைப்படங்கள்: சன் டிவியில் இன்று காலை முதலே உகாதி ஸ்பெஷல் திரைப்படங்களின் ஒளிபரப்பு துவங்கிவிட்டது. காலை 8.30 மணிக்கு சுந்தர் சி லீட் கேரக்டரில் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படம் ஒளிபரப்பானது. தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு தனுஷின் அனேகன் படம் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே சன் லைஃப் சேனலில் காலை 11 மணிக்கு மங்களகரமாக கந்தன் கருணை ஒளிபரப்பானது. தொடர்ந்து மதியம் 3 மணிக்கு தனிப்பிறவி படம் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவி.. கே டிவி: இதனிடையே கே டிவியில் காலை 10 மணிக்கு நடிகர் சசிக்குமாரின் நாடோடிகள் படம் ஒளிபரப்பானது. தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு சூர்யாவின் அயன் படமும் மாலை 4 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரவு 7 மணிக்கு வேங்கை, 10.30 மணிக்கு மம்பட்டியான் ஆகிய படங்களும் ஒளிபரப்பாகவுள்ளன. கலைஞர் டிவியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆதி மற்றும் இரவு 10.30 மணிக்கும் விஜய்யின் ஆதி படமே ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் சூப்பரில் காலை 6 மணிக்கே பரமபதம் விளையாட்டு மூலம் உகாதி ஸ்பெஷல் துவங்கிவிட்டது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், 11 மணிக்கு தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின.
கடாவர் படம்: இதனிடையே பிற்பகல் 1.30 மணிக்கு கடாவர் படமும் மாலை 4 மணிக்கு லைகர் மற்றும் இரவு 6.30 மணிக்கு சாட்டை இரவு 9.30 மணிக்கு லிஃப்ட் என மாஸான படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன. இந்நிலையில் ஜெயா டிவியில் காலை 10 மணிக்கு தலைநகரம், பிற்பகல் 1.30 மணிக்கு மானஸ்தன், மாலை 6.30 மணிக்கு மீண்டும் மானஸ்தன், படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் காலை 10 மணிக்கு பூக்களை பறிக்காதீர்கள், மதியன் 1.30 மணிக்கு லாரி டிரைவர் ராஜ்கண்ணு மாலை 4.30 மணிக்கு கொஞ்சி பேசலாம் இரவு 7 மணிக்கு மறுமுனை ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
விஜய் டக்கரில் சூப்பர் திரைப்படங்கள்: இதனிடையே ராஜ் டிவியில் அடுத்தடுத்து அடுத்த வாரிசு, ஏப்ரல் மாதத்தில் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன. பாலிமர் டிவியில் ராசுக்குட்டி, புலன் விசாரணை 2, கட்டளை ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ள சூழலில் விஜய் டக்கரில் தி சஸ்பெக்ட், உன்னை நாடி, நெடுஞ்சாலை, பிரேதம் 2, கண்ணே கலைமானே, பைண்டிங் சோல்ஸ், அய்யனார் ஆகிய படங்களும் வசந்த் டிவியில் பராசக்தி, வனஜா கிரிஜா ஆகிய படங்களும் ஒளிபரப்பாக உள்ளன. இந்தப் படங்களில் தங்களின் விருப்பத்திற்குரிய படங்களை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


Click it and Unblock the Notifications











