Just In
- 2 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 3 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
- 3 hrs ago
பிக்பாஸில் களைக்கட்டும் கள்ளக்காதல்.. புருஷன் வெளியே இருக்க இளைஞருடன் லூட்டியடிக்கும் பிரபல நடிகை!
- 4 hrs ago
ஜிகுஜிகு உடையில் கிளாமர் போஸ்… வாய் பிளந்து கதறும் சிங்கிள்ஸ் !
Don't Miss!
- News
பத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Bigg boss 3 tamil:கண்ணுபடப் போகுதய்யா உலக நாயகனே!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று அதாவது ஞாயிறு அன்று அணிந்து வந்த உடையும், அவர் நடையும்... கூலிங் கிளாஸும்...
அடடா...கண்ணு படப்போகுதய்யா உலக நாயகனே என்றுதான் பாடத் தோன்றியது. என்னா மாதிரி உடை... ஆனால், சனிக்கிழமை அந்த கால காதல் மன்னன் ஜெமினி கணேசன் பேண்ட் ஷர்ட் அணிந்து வந்தது பலருக்கும் பிடிக்கலை.
முதல் இரண்டு பிக் பாஸ் சீசனில் கமலின் உடைகளை ரசித்தும், பாராட்டியும் ஹவுஸ் மேட்ஸ் பேசுவது வழக்கம். இந்த சீசனில் ,யாரும் இதைப்பற்றி எல்லாம் பேசுவது இல்லை.பாவம் வந்ததில் இருந்தே இவர்கள் பிரச்சனையே பெரும் பாடாக இருக்கிறது.

கமலின் உடையும் நடையும்
நேற்று கமலின் உடையையும், நடையையும், ஸ்டைலான கூலிங்க் கிளாசையும் பார்த்து ரசித்த மக்கள், ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டது என்னவோ உண்மைதான்.ஏன், படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார் என்கிற கவலை. தேர்தல் பரப்புரை, மக்களை நேரடியாக சந்தித்தது என்று கமல் வெயிலில் அலைந்தாலும், மறுபடியும் கமல் தனது கலைஞன் ஃபார்முக்கு வந்துட்டார். முடிவை மறு பரிசீலனை செய்தால், இந்தியன் 2, மகள் ஸ்ருதி ஹாசனுடன் நடிக்க ஒப்புக்கொண்ட சபாஷ் நாயுடு போன்ற படங்களை கண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

சீசன் 1 ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 1 ஹவுஸ் மேட்ஸ் கமல்ஹாசன் என்றால் அவ்வளவு மரியாதை தந்தார்கள். வாரம் முழுக்க கமல் சார் கமல் சார் என்று பேசி அவர்கிட்ட எதாவது கேட்க, அல்லது புகார் செய்ய வாரத்தின் ஆரம்ப நாட்கள் முதலே திட்டமிட்டு பேசிக் கொண்டு இருப்பார்கள்.வார கடைசியில் கமலைப் பார்க்கும்போது மனதில் இருக்கும் அத்தனையையும் கொட்டித் தீர்ப்பார்கள். கமல் அணிந்து வரும் உடைகளை பாராட்டி மகிழ்வார்கள். கமல் நின்றுகொண்டே பேசினால், முதலில் நீங்க உட்காருங்க சார்னு உபசரிப்பார்கள்.

சீசன் 2 ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 2 ஹவுஸ் மேட்ஸ் எல்லாருக்கும் கூட கமல் மீது அலாதி மரியாதை இருந்தது. அவர்களும் கமல் அணிந்து வரும் உடைகளைப் பாராட்டுவார்கள் .இவர்களுக்கும் கமல்ஹாசன் நின்று கொண்டு பேசினால் பிடிக்காது.உட்கார்ந்து பேச சொல்லி வற்புறுத்துவார்கள். நடிகர் பொன்னம்பலம் ஐஸ்வர்யா,யாஷிகா கமல்ஹாசன் முன்னால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் கூட முகத்தில் அடிச்ச்சது போல பேசிவிடுவார். இதை எல்லாம் கமல் கொண்டு கொள்பவர் இல்லை என்றாலும், அவர் ஒரு அற்புத கலைஞன்.இதை மறுக்க இயலுமா?

சீசன்3 ஹவுஸ் மேட்ஸ்
யம்மாடி பிக் பாஸ் சீசன் 3 ஹவுஸ் மேட்ஸ் பத்தி கேட்கவே வேணாம்...மரியாதைக்கு கூட கமல்ஹாசனை நின்னுக்கிட்டே பேசறீங்களே சார்னு கேட்க ஆளில்லை. அவர் உடையை பாராட்டியது இல்லை, வீட்டின் லிவிங் ஏரியாவில் உட்கார்ந்து இருக்கும் ஹவுஸ் மேட்சுக்கு அவரவர் பற்றி சிந்திக்கவும், கவலைப்படவுமே நேரம் போதவில்லை. போதாததுக்கு அபிராமி பொசுக்கு பொசுக்குன்னு அழறார்.கூடவே மீராவும் அழறார்.கடுப்பா இருக்குதுங்க. கமல் வந்தால் கூட ஜாலி இல்லை.