For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே லவ் மூடுதான்.. கவினையும் லாஸ்லியாவையும் வைத்து பிக்பாஸ் ஏதோ பிளான் பண்ணிட்டாரு போல!

|

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவிலும் கவின் - லாஸ்லியா காதல் காட்சிகளே காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் மீண்டும் குறைந்துவிட்டது. குறிப்பாக மதுமிதா வெளியேறிய பிறகு டாஸ்க்கில் கூட சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது.

நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட கவின் - சாக்ஷி - லாஸ்லியாவின் முக்கோண காதல் கதை வாரக் கணக்காய் வைத்து ஓட்டினர். இதனால் கடுப்பான பார்வையாளர்கள் கழுவி ஊற்றவே அபிராமி - முகென் காதலை வைத்து ஓட்டினார்கள்.

கள்ளக்காதலுக்கு விளக்கம் வேறயா? நீங்க எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

கவின் - லாஸ்லியா காதல்

கவின் - லாஸ்லியா காதல்

அந்தக் காதலும் கடைசியில் புஸ்ஸாகிப் போக, தற்போது கவின் - லாஸ்லியா காதலை வைத்து ஓட்டி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இளம் பெண்கள் என்றால் லாஸ்லியாவும் ஷெரினும் மட்டுமே உள்ளனர்.

இருவரும் கடலை

இருவரும் கடலை

ஆரம்பத்தில் இருந்தே கவின் மீது லாஸ்லியாவுக்கு ஒரு கண் இருந்தது. ஆனால் கவின் சாக்ஷியை காதலித்தார். இதனால் இருவரும் கடலை மட்டும் போட்டு வந்தனர்.

கவலையில்லை

கவலையில்லை

தற்போது சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இல்லாத நிலையில் கவினும் லாஸ்லியாவும் எந்த டென்ஷனும் இல்லாமல் காதலிக்க தொடங்கிவிட்டனர். இதனால் அவர்கள் யார் குறித்தும் கவலைப் படுவதில்லை.

லிவிங் ஏரியாவில்

லிவிங் ஏரியாவில்

இந்நிலையில் இன்று வெளியான மூன்று புரமோவிலும் கவின் மற்றும் லாஸ்லியாவை மட்டுமே காட்டியுள்ளனர். தற்போது வெளியான மூன்றாவது புரமோவில் லிவிங் ஏரியாவில் கவினும் லாஸ்லியாவும் சேர்ந்து உட்காந்து சாப்பிடுகின்றனர்.

குழந்தை போல்

குழந்தை போல்

அப்போது சேரன் பேசியது குறித்து கவின் லாஸ்லியாவிடம் சொல்கிறார். அதற்கு லாஸ்லியா என்னை பற்றி சேர்த்து சொன்னாரா என்று கேட்கிறார் லாஸ்லியா. அதற்கு கவின், உன்னை ஒரு குழந்தை போல் பார்ப்பதாக கூறினார் என்கிறார்.

வெட்கம் கொஞ்சல்

வெட்கம் கொஞ்சல்

அப்போது முன்னர் சேரனிடம் கவினை இப்போது ரொம்ப பிடித்திருக்கிறது என்று கூறினேன் என தங்களின் காதல் குறித்து பேசுகிறார் லாஸ்லியா. தொடர்ந்து இருவரும் வெட்கப்பட்டு சிரிப்பதும் கொஞ்சுவதுமாக உள்ளது புரமோ.

பிக்பாஸ் பிளான்

பிக்பாஸ் பிளான்

இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் வேறு யாருமே இல்லையா தொடந்து கவினையும் லாஸ்லியாவையும் காட்டுகிறார்கள் என்று கேட்டு விளாசியுள்ளனர். மேலும் இப்படிதான் கவினையும் சாக்ஷியையும் காட்டி அந்த காதலுக்கு வேட்டு வைத்தார். அதேபோல் இந்த காதலுக்கும் வேட்டு வைக்க பிக்பாஸ் பிளான் போட்டுள்ளார் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

English summary
In third promo also biggboss shows Kavin and Losliya.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more