Pandian stores : ஐஸ்வர்யா -கண்ணன் மீது கடுப்பில் மூர்த்தி.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காணப்படுகிறது. இந்த சேனலில் டிஆர்பிரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை இந்தத் தொடர் பிடித்துள்ளது.

நான்கு அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களின் குடும்பம் என ஒரே குடும்பமாக வாழ்ந்துவந்த இவர்கள், தற்போது மூன்றாக பிரிந்துள்ளனர்.

ஜீவாவின் மச்சினிச்சி திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்களிடையே பிரிவினை ஏற்பட்டது.

In Vijay TVs Pandian stores serial new promo makes fans angry on Aiswarya

ஐஸ்வர்யா மீது கோபப்படும் மூர்த்தி :விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். பாக்கியலட்சுமி தொடரை தொடர்ந்து இந்தத் தொடர் டிஆர்பியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை கதைக்களமாக வைத்து இந்தத் தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒன்றாக ஒரே குடும்பத்தில் வாழ்ந்துவந்த இவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தங்களது ஒற்றுமையை மட்டும் விட்டுவிடாமல் இருந்தனர்.

ஆனால் ஜீவாவின் மச்சினிச்சி திருமணத்தில் மொய் வைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் பிரச்சினை ஏற்பட்டு அவர் தன்னுடைய மாமனார் வீட்டுடன் தங்கிவிட, அதே பிரச்சினையால், தன்னுடைய கணவன் கண்ணனையும் வீட்டை விட்டு பிரித்து தனியாக அழைத்து சென்றுவிட்டார் ஐஸ்வர்யா. இதனால் குடும்பம் மூன்றாக பிரிந்துவிட்டது. இதனால், அதிகமான மனவருத்தத்தில் மூர்த்தி மன உளைச்சலடைந்துள்ளார். கடையின் வேலைகள் அனைத்தும் அவர் தலைமீது விழுகிறது.

In Vijay TVs Pandian stores serial new promo makes fans angry on Aiswarya

இந்நிலையில் ரீல்ஸ் வீடியோ போடுவதாக கூறி கண்ணனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் ஐஸ்வர்யா வழுக்கி கீழே விழ, அதனால் அவருக்கு வயிற்றில் அடிபடுகிறது. இந்த வேளையில், கையில் காசில்லாமல் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகிறார் கண்ணன். சாதாரண மளிகை, மருந்துப் பொருட்கள் வாங்கவும் காசில்லாமல் அவர் திண்டாடுகிறார். இவற்றையெல்லாம் சிறிதும் மனதில் போட்டுக் கொள்ளாமல் விளையாட்டு புத்தியுடன் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிடுகிறார் ஐஸ்வர்யா.

சின்ன சின்ன விஷயங்களையும் அவர் வீடியோக்களாக பதிவிட, அதனால் ரோடில் அனைவரும் குடும்பத்தினரிடம் அதுகுறித்து கேட்கின்றனர். இதனால் மூர்த்தி மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகிறார். தன்னுடைய மனைவி மற்றும் தம்பி கதிரிடம் இதுகுறித்து கேட்டு அறிந்து கொள்கிறார். தொடர்ந்து இது என்ன பொழப்பு என்று ஐஸ்வர்யா மீது கடுப்பாகிறார். இதுகுறித்து கண்ணனிடம் தெளிவுப்படுத்தவும் கூறுகிறார்.

In Vijay TVs Pandian stores serial new promo makes fans angry on Aiswarya

சிறுபிள்ளைத்தனமாக வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மற்றவர்கள் அறியும்படி வீடியோ வெளியிடுவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து ஐஸ்வர்யா மற்றும் கண்ணன்மீது கோபமடையும் அவர், ஐஸ்வர்யாதான் இப்படி நடந்துக் கொள்கிறார் என்றால், கண்ணனுக்கு அறிவு எங்கு போயிற்று என்றும் கேள்வி எழுப்புகிறார். இவ்வாறு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் குடும்பத்தினர் இதுகுறித்து எப்படி எடுத்து சொல்லப் போகிறார்கள் என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X