Mid week Eviction: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் முதல் மிட் வீக் எவிக்ஷன்.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இந்த சீசனில் அதிரடி காட்டி வருகிறது. இன்றைய தினம் 74வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.
மற்ற சீசன்களில் இல்லாதவகையில் இந்த சீசனில் பல மாற்றங்களை இந்த நிகழ்ச்சி கொடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்த சீசனில் இரு பிக்பாஸ் வீடுகள், டபுள் எலிமினேஷன் போன்றவை ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தது.
பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 74வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியில் அனைவரும் வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு தயாராகவே உள்ளனர்.

வைல்ட் கார்ட் என்ட்ரி: நிகழ்ச்சியில் கூலாகவே செயல்பட்டு வந்த கூல் சுரேஷும் சண்டைக்கு தயாராகவே உள்ளார். நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் வாரத்திலிருந்தே எலிமினேஷன் தொடர்ந்து வருகிறது. முதல் வாரத்திலேயே குறைவான புள்ளிகளை பெற்று அனன்யா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விஜய் வர்மா மற்றும் அனன்யா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ளனர்.
டஃப் கொடுக்கும் அர்ச்சனா: இதேபோல முன்னதாக நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா மற்றும் தினேஷ் அதிரடி காட்டி வருகின்றனர். மாயா மற்றும் பூர்ணிமா கேங்கிற்கு மிகப்பெரிய சவாலா அர்ச்சனா காணப்படுகிறார். இந்நிலையில் தற்போது பூர்ணிமாவுடன் நட்பு பாராட்டி வருகிறார். கடந்த வாரம் மழை காரணமாக இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மிட் வீக் எவிக்ஷன்: இதற்கான நாமினேஷனும் நடத்தப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இன்றைய தினத்தின் 3வது பிரமோவில் இன்றைய தினம் மிட் வீக் எவிக்ஷன் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு மற்றும் நிக்சன் நாமினேட் ஆன நிலையில், இதற்கான டாஸ்க் வைக்க்ப்பட்டுள்ளது. தங்களது புகைப்படத்தை நிறைவு செய்ய இவர்கள் போட்டியிட்ட நிலையில் புகைப்படத்தை நிறைவு செய்யாத நபர்கள் போட்டியிலிருந்து எலிமினேட் ஆகவுள்ளதாக பிக்பாஸ் கூறுவதாக தற்போது வெளியாகியுள்ள 3வது பிரமோவில் காணப்படுகிறது-
அனன்யா எலிமினேஷன்?: இதனிடையே இன்றைய மிட் வீக் எவிக்ஷனில் அனன்யா வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் துவக்க போட்டியாளராக களமிறங்கினார் அனன்யா. ஆனால் ரசிகர்களை கவரத் தவறிய இவர் குறைவான வாக்குகளை பெற்று முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆனார். இந்நிலையில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த இவர், அப்போதாவது ரசிகர்களை கவரும்வகையில் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதும் இவர் அதை செய்யாதது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











