நிமிர்ந்து நில், குக்கூ, பாண்டியநாடு…. சுதந்திர தினத்தை கொண்டாடும் டிவி சேனல்கள்
சுதந்திர தினத்தை தொலைக்காட்சி சேனல்கள் புத்தம் புது திரைப்படங்களுடன் கொண்டாடத் தயாராகிவருகின்றன. குக்கூ, நிமிர்ந்து நில், வாயை மூடி பேசவும், பாண்டியநாடு என புத்தம் புதிய திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளன.
சுதந்திரதின விடுமுறை நாளில் புத்தம் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியானாலும், சினிமா ரசிகர்களை வீட்டோடுகட்டிப்போட்டு வைக்க தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளன.
நடிகர், நடிகையர் பேட்டிகள், பட்டிமன்றங்கள், என சிறப்பு நிகழ்ச்சிகளோடு, புத்தம் புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்புகின்றன.

நிமிர்ந்து நில்
ஜெயம் ரவி, அமலாபால், நடித்த நிமிர்ந்து நில் திரைப்படம் சன்டிவியில் ஆகஸ்ட் 15 சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

கல்யாண சமையல் சாதம்
விஜய் டிவியில் காலை 10 மணிக்கு பிரசன்னா, நடித்த கல்யாண சமையல் சாதம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

குக்கூ
சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக விஜய் டிவியில் அட்டக்கத்தி தினேஷ், மாளவிகா நாயர் நடித்த குக்கூ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

வாயை மூடி பேசவும்
ஜீ தமிழ் சேனலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறப்புத் திரைப்படமாக நஸ்ரியா நடித்த வாயை மூடிப் பேசவும் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

பாண்டியநாடு
ராஜ்டிவியில் விஷால், லட்சுமி மேனன் நடித்த பாண்டியநாடு திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஜெயா, கலைஞர்,
சுதந்திர தினத்தை ஒட்டி, ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும், சிறப்புத் திரைப்படங்களையும் ஒளிபரப்புகின்றன.
தொலைக்காட்சிகளில் சிறப்புத் திரைப்படங்களை பார்த்துக்கொண்டே சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் ரசிகர்களே.


Click it and Unblock the Notifications











