சுதந்திர தினம்: சென்னையில் ஒருநாள், சுந்தரபாண்டியன், கடல், வத்திக்குச்சி...
சுதந்திர தினத்தை ஒட்டி சன்டிவியில் சென்னையில் ஒருநாள், சுந்தரபாண்டியன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவியில் கடல், வத்திக்குச்சி திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
சுதந்திரத்தன்று விடுமுறை என்பதால் டிவி சேனல்கள் போட்டு போட்டுக்கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.
புத்தம் புதிய திரைப்படங்களும், பிரபல நடிகர், நடிகைகளின் பேட்டி பட்டிமன்றம்,என சுவையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை வீட்டோடு கட்டிப்போட்டு வைக்க நினைக்கின்றன டிவி சேனல்கள். ஆனாலும் ஒருசிலர் எஸ்கேப் ஆகி ரிலீஸ் படங்களை பார்க்க கிளம்புவது வேறு விசயம். டிவியை மட்டுமே பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த லிஸ்ட் மேற்கொண்டு படியுங்கள்.

சன் டிவியில் சுந்தரபாண்டியன்
சன் டிவியில் சுதந்திர தின ஸ்பெசலாக காலையில் பிரகாஷ்ராஜ், ராதிகா, சரத்குமார், சேரன் நடித்த சென்னையில் ஒருநாள் திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும். மாலை 6 மணிக்கு சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படம் ஒளிபரப்பாகும்.

நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்ஏ
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்ஏ திரைப்படம் ஒளிபரப்பாகும். இதனையொட்டு சிறப்பு போட்டியும் அறிவித்துள்ளனர். நீங்கள் எம்.எல்.ஏ வானல் சமுதாயத்திற்கு என்ன செய்வீர்கள்? என்பது பற்றி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எழுதி அனுப்பவேண்டுமாம். நல்ல கட்டுரைக்கு 100000 ரூபாய் பரிசு தர உள்ளனர்.

விஜய் டிவியில் கடல்
விஜய் டிவியில் கவுதம் கார்த்திக், துளசி, அரவிந்த் சுவாமி, அர்ஜூன் நடித்த கடல் திரைப்படம் காலையில் ஒளிபரப்பாக உள்ளது. மாலையில் திலீபன், அஞ்சலி நடித்த வத்திக்குச்சி திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

லிங்குவின் ஹைகு
விஜய் டிவியில் காலை 8 மணிக்கு பட்டிமன்றமும், காலை 9 மணிக்கு ‘லிங்குவின் ஹைகு' நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது. இயக்குநர் லிங்குசாமி தன்னுடைய கவிதைகள் பற்றியும், சினிமா, தன்னுடன் பணிபுரிந்தவர்கள் பற்றியும் நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

ஜி.வி.பிரகாசின் காதல்
காலை 10 மணிக்கு காதல் என் காதல் என்ற நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தன்னுடைய காதல் மனைவி சைந்தவி பற்றியும், காதல் பற்றியும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

கார்த்தியின் ஸ்பெசல் பிரியாணி
பிற்பகல் 3 மணிக்கு நடிகர் ‘கார்த்தியின் ஸ்பெசல் பிரியாணி' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வெங்கட் பிரபு, கார்த்தி, ஆகியோர் பிரியாணி படம் பற்றி ரசிகர்களுடன் உரையாடுகின்றனர்.

விஜய் சேதுபதியின் பேட்டி
‘பீட்சா', ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' சூது கவ்வும் திரைப்பட நாயகன் விஜய் சேதுபதி ஸ்பெசல் பேட்டி மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சுதந்திர தினத்தை வித்தியாசமாய் கொண்டாட ஒரு வாய்ப்பு!


Click it and Unblock the Notifications











