லைஃப் போச்சு.. இந்திரஜா சங்கரால் டென்ஷனான கணவர்.. ஹோட்டலில் முட்டிக்கிச்சு.. வீடியோவை பார்த்தீங்களா?

சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி தனது மாமாவான கார்த்திக்கை திருமணம் செய்துக் கொண்டார். நடிகர் ரோபோ சங்கர் தனது மகளின் திருமணத்தை மதுரை, சென்னை என கோலாகலமாக நடத்தி கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தார். இந்திரஜா சங்கருக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் எடுத்த வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்திரஜா சங்கர்.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் அறிமுகமான இந்திரஜா ஷங்கர், அடுத்ததாக கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் காமெடி ரோலில் நடித்திருந்தார்.

Indraja Shankar and her husband Karthick funny fight video at hotel goes trending

ஜீ தமிழில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவான 'சர்வைவர்' தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட இந்திரஜா ஷங்கர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொண்டு குழந்தையும் பெற்று குடும்பப் பெண்ணாக மாறியுள்ளார். ஆனாலும், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

ஹோட்டல் வீடியோ: இந்திரஜா சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் கார்த்திக்குடன் ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்ற இடத்தில் இருவரும் செய்த சேட்டைகளை வீடியோவாக எடுத்து பரிதாபங்கள் கோபி வாய்ஸ் மற்றும் விவேக்கின் காமெடி வசனத்தை வைத்து இவர்கள் எடிட் செய்து வெளியிட்ட வீடியோ தற்போது சோஷியலில் டிரெண்டாகி வருகிறது.

மூஞ்சிலேயே குத்தப்போன இந்திரஜா: ஹோட்டலில் இந்திரஜாவுக்கு வந்த உணவை அப்படியே அவரது கணவர் கார்த்திக் எடுத்து சாப்பிட முயற்சி செய்யும் போது, பரிதாபங்கள் கோபியின் வாய்ஸில், "பெண் தானே.. பெண் சாஃப்ட்டா இருப்பான்னு நினைக்காதீங்க.. நான் கொஞ்சம் ரக்கட் ஆன ஆள்" என பேசியபடியே கணவர் கார்த்திக்கின் மூஞ்சிலேயே குத்தப் போய்விட்டார் இந்திரஜா சங்கர்.

லைஃப்பே போச்சு: அதற்கு பதில் கவுன்ட்டர் கொடுப்பது போல விவேக் பட காமெடி வசனமான, "விடு விடு பிளேட்டை பாரு பிளேட்டை பாரு.. மத்தது எல்லாம் வீட்டுல போய் பார்க்கலாம்.. வைஃப்பா? நைஃப்பா? தெரியல.. மொத்தத்துல லைஃப் போச்சு" என்கிற டயலாக் ஆடியோவை போட்டு தலையில் அடித்துக் கொள்ளும் அப்பாவி கணவர் கார்த்திக்கின் ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X