ரோபோ சங்கர் பேரன் நட்சத்திரனின் முதல் வெளிநாட்டுப் பயணம்.. விமானத்தில் மகனுடன் இந்திரஜா சங்கர்!
சென்னை: அப்பா ரோபோ சங்கரே தனக்கு மகனாக வந்து பிறந்துள்ளார் என்றும் நட்சத்திரனை பார்த்து எப்போதுமே தனது சோகத்தை மறந்து சந்தோஷமாக இருந்து வருகிறார் நம்ம பிகில் பாண்டியம்மா.
சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்த ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதன் பின்னர், சிகிச்சையின் பலனாக மீண்டு வந்த ரோபோ சங்கர் தனது மகளின் திருமணத்தை சென்னை, மதுரை என ஜாம் ஜாம் என நடத்தி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆனால், அவரது மறைவு அவரது குடும்பத்தையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நட்சத்திரனின் முதல் வெளிநாட்டுப் பயணம்: விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்திரஜா சங்கர், கார்த்தியின் விருமன் படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாகவும் நடித்திருந்தார். சினிமா, சின்னத்திரை என அவரது குடும்பமே பிசியாக உள்ள நிலையில், அவ்வப்போது டூர் அடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். தனது குடும்பத்துடன் இலங்கைக்கு சென்ற நிலையில், நட்சத்திரனின் முதல் சர்வதேச பயணம் என கேப்ஷன் போட்டு விமானத்தில் பயணித்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் இந்திரஜா சங்கர்.
இலங்கையில் இந்திரஜா: தமிழ்நாட்டில் இருந்து விமானம் மூலமாக இலங்கைக்கு தனது மகன் நட்ச்த்திரன் கணவர், அம்மா உள்ளிட்ட குடும்பத்தினருடன் இந்திரஜா சங்கர் சுற்றுலா சென்ற போட்டோக்களையும் விமானத்தில் தனது மகன் பயணித்த முதல் அனுபவத்தையும் இந்திரஜா சங்கர் ஷேர் செய்துள்ளார். நட்சத்திரன் நல்லா வளர்ந்துட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
செம க்யூட்: இந்திரஜா சங்கர் தனது மடியில் மகனை தூங்க வைத்து விமான நிலையத்தில் அழைத்துச் சென்ற காட்சிகளை பார்த்து ரசித்த ரசிகர்கள் நட்சத்திரன் செம க்யூட் என கொஞ்சி கமெண்ட் போட்டுள்ளனர். குட்டி இந்திரஜா மாதிரியே இருக்கிறான் என்றும் என்னம்மா விளையாடுறான் என்றும் ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications