azhagu serial: இப்படி எல்லாமா உலகத்துல இருக்கு...ப்பா என்னா கற்பனை!

சென்னை: ஒரு குடும்பத்துக்கு கெடுதல் செய்யறவங்க இருப்பாங்களான்னே நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கு.ஆனால், பில்லி சூனியம், ஏவல்... இதெல்லாம் கேள்விப்பட்டால், ஒரு குடும்பத்துக்கு கெடுதல் செய்ய அந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களே இருப்பாங்கன்னு லேசா நம்பிக்கை வருது.

ஆனால், நல்லா படிச்ச குடும்பத்தில் நகரத்து வாழ்க்கையிலும், இவ்வளவு கேடு நினைக்கும் இளம் வயசு பெண்கள் குடும்பத்தில் இருப்பங்களான்னு நினைக்கும் அளவுக்கு அழகு சீரியல் பூர்ணா கதாபாத்திரம் இருக்குது. கெட்டது செய்ய வேண்டியதுதான்...அதுக்குன்னு இப்படியா என்று மலைக்க வைக்குது.

கால் நடக்க முடியாதுன்னு சீன் போடும் பூர்ணாவை சந்தேகப்படும் ரவி, அவளை ஆஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போயி டெஸ்ட் செய்தால் உண்மை தெரிஞ்சுரும்னு சொல்ல, எல்லாருமா போறாங்க. அங்கே டாக்டரும் பூர்ணாவால் நடக்க முடியாதுன்னு சொல்றாங்க. பார்த்தா, 2 மணி நேரத்துக்கு கால் மரத்துப் போகும் மாத்திரையை பூர்ணா எடுத்துக்கிட்டாளாம்!

காதுல பூ

காதுல பூ

ரொம்ப பொய் பேசினா காதுல பூ வச்சுக்கிட்டு இருக்கேன்னு ரீல் விட்றியான்னு கேட்பாங்க. சீரியல்களில் காதுல கூடை கூடையா பூவை சுத்தி விடறாங்க. ஆரம்பத்தில் நல்ல பொண்ணா இருந்த பூர்ணா ஒரு ஏமாற்றத்தில் இப்படி கெட்டவளா மாறிட்டான்னு கதையை கொண்டு போறாங்க. அதுக்குன்னு இப்படியா என்று கேட்கும் அளவுக்கு பூர்ணாவின் செயல்கள் இருக்கு.

சுதா பூர்ணா

சுதா பூர்ணா

சுதாவுக்கு பூர்ணாவால் நடக்க முடியும்னு தெரியுமாம். ஆனால், அந்த வீடியோவை வச்சு அவளை நல்லவளா மாத்திக்காட்ட முயற்ச்சி செய்வாளாம். அந்த வீடியோவையும் பூர்ணா எடுத்துக்கிட்டு, இன்னும் ஆட்டம் காட்டுவாளாம். இன்னொரு தரமான கதாநாயகி சீரியலுக்கு ரெடியாகறாங்க... அதாவது சீரியலில் எவ்ளோ அடிச்சாலும் தாங்கறா மாதிரியான கேரக்டர்.... அதுதான் சுதா.

மரத்துப்போகும் மாத்திரை

மரத்துப்போகும் மாத்திரை

மாத்திரையை போட்டால் அது உடல் எங்கும்தானே மரத்துப்போகும்? அது என்ன ஊசியா காலில் மட்டும் மரத்துப்போக? கொஞ்சம் நஞ்சம் பொது அறிவு உள்ளவங்களையும் முட்டாளாக்கி பார்க்கறதுக்கா சீரியல்கள்? சின்ன சின்ன விஷயம்னாலும் தாங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வரும் மக்களையும் குழப்பி வைக்கும் சீரியலாகத்தான் அழகு சீரியலின் நேற்றைய எபிசோட் இருந்தது,.

நிரூபிக்க முடியும்

நிரூபிக்க முடியும்

பூர்ணா நடிக்கிறாள் என்பதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று முடிவெடுத்து கதையை கொண்டு போவதும்.பூர்ண நடிக்கிறாள் என்பதை நிரூபிக்க முடிந்தும், அவளை திருத்தறேன்...எதுவா இருந்தாலும் பூர்ணாவை நான் சரி செய்யறேன்மா.. நீங்க கவலைப்படாதீங்க என்று சுதா சொல்வதை பார்க்கையில் எரிச்சல்தான் வருது. சீரியலா இருந்தால் கூட சின்ன சின்ன கற்பனையா இருக்கணும். அதீத கற்பனை..ஆவேசப்பட வைக்குது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X