பிக் பாஸ் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Siva

Recommended Video

ஸ்மோக்கிங் ரூமை டாய்லெட்டுக்கு மாத்திய பிக் பாஸ் புது வீடு- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் கிடைத்துள்ளன.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது. முதல் சீசனை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

வீடு

வீடு

வாஸ்து பார்த்து பிக் பாஸ் வீட்டு செட்டை போட்டுள்ளார்களாம். கடந்த சீசன் போன்று இல்லாமல் இந்த சீசனில் முற்றிலும் வித்தியாசமான வீடாக உள்ளதாம். இந்த சீசனில் நீச்சல் குளம் அருகே சிறை ஒன்றை அமைத்துள்ளார்களாம்.

சிறை

சிறை

இந்தி பிக் பாஸ் வீட்டில் சிறை இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ் பிக் பாஸ் வீட்டு சிறையில் கழிப்பறை வசதி கிடையாது. இம்முறை தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள்

பெண்கள்

கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசனில் 8 பெண் போட்டியாளர்கள், 8 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேராம். கடந்த சீசனில் 8 ஆண் போட்டியாளர்கள், 7 பெண் போட்டியாளர்கள் என 15 பேர் கலந்து கொண்டனர். அது போக ஒயில்டு கார்டு மூலம் நான்கு பேர் வந்தனர்.

சீசன் 2

சீசன் 2

பிக் பாஸ் 2 சீசனை 100 நாட்களுக்கு மேல் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். வீட்டில் பேய் எதுவும் வந்துவிடாமல் இருக்க தகடுகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளதாம்.

புகைப்பிடிக்கும் அறை

புகைப்பிடிக்கும் அறை

பெண்களுக்கான படுக்கையறையில் இம்முறை கழிப்பிடம் வைக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் அறை தனியாக வைக்காமல் கழிப்பிடத்துடன் சேர்த்து கட்டியுள்ளனர். தம்மடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் தம்மடிப்பவர்களுக்கும் இடையே சண்டையை தூண்ட இந்த ஏற்பாடோ?. வீட்டை கலர்ஃபுல்லாக உருவாக்கியிருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X